கலை.....இப்போது எத்தனை தொழிலாளிகள் இந்த குழுமத்தில் வேலை பார்க்கின்றனர் ? உலகில் எத்தனை நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இவற்றின் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யபடுகின்றன?மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
ராஜா.....தற்போது 10 ஆயிரம் தொழிலாளிகள் இந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இதன் மொத்த சொத்து மதிப்பு 800 கோடி யுவானை தாண்டும். இதன் உற்பத்தி பொருட்கள் உலகில் 60க்கும் அதிகமான நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கலை..... பெற்றுள்ள சாதனைகளைக் கண்டு தொழில் நிறுவனத்தின் நிர்வாகிகள் திருப்தி அடைந்துள்ளனர். அல்லவா?
ராஜா.....ஆம். ஆனால் ஈட்டியுள்ள சாதனை அவர்களை முன்னேற்றமடைய தூண்டும் சக்தி மட்டும் தான். தலைமை இயக்குனர் சான் சின் இது பற்றி கூறியதாவது
கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் ஆராய்ச்சியில் முதலீடு செய்யும் அளவை அதிகரித்துள்ளோம். முதலீட்டு தொகை விற்பனை வருமானத்தில் 4.7 விழுக்காடு வகிக்கின்றது. 30 கோடி யுவானை தாண்டியுள்ளது. இவ்வாண்டு இதை 5 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக அறிவுசார் சொத்துரிமை கொண்ட100 சிறப்பு தொழில் நுட்ப வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை அறிவியல் முறையில் ஆராய்ந்து வலுப்படுத்தும் ஆற்றல் பெரிதும் அதிகரித்துள்ளது என்றார் அவர்.
கலை.....சிங்கியாங்கில் சிறப்பு மின்சார உற்பத்தி கட்டுப்பாட்டு தொழில் நிறுவனம் தவிர, மின்சார துறையுடன் தொடர்புடைய வேறு தொழில் நிறுவனம் உண்டா?
ராஜா....உண்டு. 2002ம் ஆண்டில் எல்லை புறத்திலும் தொலைதூர பகுதியிலும் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் ஊடனுப்பு பிரச்சினையை தீர்க்கும் வகையில் சீன அரசு மின்சாரத்தை கிராமத்துக்கு அனுப்பும் திட்டப் பணியை துவக்கியுள்ளது. மின்சாரம் பெறுவதில் இன்னலுக்குள்ளாக்கப்பட்ட கிராமங்களில் சூரிய ஆற்றல் கொண்ட மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தை நிறுவுவதற்கு மாபெரும் அளவில் முதலீட்டு செய்துள்ளது. கலை.....இதற்கு ஏதாவது உதாரணம் உண்டா? அதை சொல்வீர்களா?
ராஜா......கண்டிப்பாக. சிங்கியாங் புது வகை எரி ஆற்றல் நிறுவனத்தின் தலைமை இயக்குனரின் துணையாளர் குவான் சின்துங் இது பற்றி கூறியதாவது 2002ம் ஆண்டு அரசு மின்சாரத்தை கிராமத்துக்கு அனுப்பும் திட்டப் பணி துவக்கிய பின் எங்கள் புதுவகை எரி ஆற்றல் நிறுவனம் சூரிய ஆற்றல் மின்சாரம் உற்பத்தி செய்வது, சூரிய ஆற்றல் பயன்பாடு உள்ளிட்ட சில முக்கிய தொழில் நுட்ப ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்லது. போதிய ஆயத்தம் செய்து 40 விழுக்காட்டு திட்டப் பணிகளை ஏலம் மூலம் நாங்கள் பெற்றுள்ளோம். சீனாவில் சூரிய ஆற்றல் வளர்ச்சியில் ஈடுபடும் 50க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களில் மேலும் கூடுதலான திட்டப் பணிகளை பெற்றுள்ள தொழில் நிறுவனம் எங்களுடையது என்றார்.
கலை......கிராமத்துக்கு மின்சாரம் அனுப்பும் திட்டப் பணியில் 40 விழுக்காட்டு நிகழ்ச்சிகளை பெற்ற இந்த தொழில் நிறுவனங்கள் இதுவரை எத்தனை கிராமங்களில் சூரிய ஆற்றல் கருவியை நிறுவியுள்ளன. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் மின்சார பயன்பாட்டு சூழ்நிலை எப்படி. என்னென்ன பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன?அது பற்றி விளக்கிக் கூறுங்கள்.
ராஜா.....இந்த நிறுவனம் பெற்றுள்ள திட்டப் பணிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. 200க்கும் இதிகமான கிராமங்கள் சீனாவின் சிங்கியாங், சூச்சான் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ளன. அங்குள்ள விவசாயிகள் மற்றும் ஆயர்களின் மின்சார பயன்பாட்டு, விளைநிலங்களில் நீர் பாய்ச்சலுக்கு தேவைப்படும் மின்சார விநியோகம் போன்ற பிரச்சினைகள் தீர்ந்து விட்டன. தவிரவும் இந்த நிறுவனம் தயாரித்த சூரிய ஆற்றல் உற்பத்தி பொருட்கள் சிங்காய் மற்றும் திபெத் ரெயில்வே உட்பட பெரிய ரக திட்டப் பணிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தவிரவும் ஜெர்மணி போன்ற பல வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் இதன் விற்பனை வருமானம் 20 கோடி யுவானை தாண்டியுயது. இதன் துவக்கத்தில் இருந்ததை விட 20 மடங்காக ுயர்ந்துள்ளது.
கலை.....நேயர்களே சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்திலும் தொழில் நுட்பத்தை சீர்த்திருத்துவதிலும் செய்த முதலீடு 5000 கோடி யுவானை தாண்டியுள்ளது. தற்போது அங்கு மேலும் அதிகமான தொழில் நிறுவனங்கள் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தை கொண்டு விரைவாக வளர்ச்சியடைந்துள்ளன.
ராஜா.....நேயர்கள் இதுவரை சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தொழில் நிருவனங்களின் வளர்ச்சி பற்றிய கேள்விக்கு விடை அளித்துள்ளோம். இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவுறுகின்றது.
|