சீன வேளாண் துறை அமைச்சகத்துக்கும் அமெரிக்காவுக்குமிடை ஒத்துழைப்பு
cri
சீனாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் நோக்குடைய வேளாண் தொழில் நுட்பத்தை பரப்பிட, சீன வேளாண் அமைச்சகமும் அமெரிக்க Ge Advanced Materials நிறுவனமும் இன்று பெய்சிங்கில் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒருவகை திரவம் வேளாண் பயிர்கள் மீது தெளிக்கப்பட்டால், பூச்சி மருந்தால் மண்ணுக்கும் நீருக்கும ஏற்படும் மாசு கட்டுப்படுத்தப்படுகிறது. சீனாவின் 13 மாநிலங்கள் மற்றும் நகரங்களில், பத்துக்கு மேலான பயிர்களுக்காக இத்தொழில் நுட்பம் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்று சீன வேளாண் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|
|