• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-23 17:13:17    
நேயர்களின் கருத்துக்கள்

cri
ரா------யானைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள் புத்தாண்டு இன்னும் பிறக்க வில்லை அதற்குள் வாழ்த்து வந்துவிட்டது

வி------அப்படியா. யாருடைய வாழ்த்து

ரா------ ஈரோடு எம் சி பூபதி 2006ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை முன் கூட்டியே தெரிவித்துள்ளார். மேலூம், அக்டோம்பர் திங்கள் நேருக்கு நேர் நிகழ்ச்சிய்ல எஸ் எம் ரவிச்சிந்திரன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதைப் பாராட்டி விட்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானி மக்களுக்கு உதவி வழங்கிய சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை மணலிபுதூரில் இருந்து தங்க சங்கரபாண்டியன் தமது பகுதியில் சீன வானொலி நேயர் மன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார். மேலும் சீன வானொலியின் பல்வேறுதனிச் சிறப்புக்கலைப் படிடயிட்டுப் பாராட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் அல்லூர் நேயர் டி நவநீதன், நேயர்களை சிறப்பு விருந்தினராக தனது நாட்டுக்கு வரவழைக்கும் ஒரே வானொலி சீன வானொலியே என்று கூறுகிறார். அப்புறம் சு ரகுபதி என்ற நேயர் கடித்தாளில் ஊர் பெயர் இல்லை-தமது நண்பர் மூலம் சீன வானொலி பற்றி அறிந்து கொண்டு கடிதம் எழுதியுள்ளார். சீனாவைப் பற்றி சில செய்தி ஏட்டுத் தகவல்களை அனுப்பியுள்ளார்.

வி------நேயர்களின் உற்சாகத்துக்கு நன்றி. வாய்மொழி மூலமாக சீன வானொலியின் சிறப்புக்களை பரப்பும் நண்பர்களைப் பாராட்டுகிறோம்

ரா-----இந்திய சுதந்திர தினத்தன்று நேயர் விருப்பத்தில் இரண்டு சிறப்புப்பாடல்களை ஒலிபரப்பி, இந்திய-சீன நட்புறவை வலுப்படுத்திய வான்மதிக்கு பாராட்டுக்களுடன் கடிதம் எழுதியுள்ளார். புதுவை மாநிலம் பெரியகாலாப்பட்டு பி சந்திர சேகரன், சீன இசை நிகழ்ச்சியில் சீன நாட்டுப்புறப் பாடல்களுடன் சீனபாப் பாடலையும் ஒலிபரப்புமாறு மீனாவுக்கு இவர் கோரிக்கை வைக்கிறார். இவர் ஆகஸ்ட் திங்கள் நிகழ்்சிகள் பலவற்றைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, அறிவியல் உலகம் நலவாழ்புப் பாதுகாப்பு இரண்டு நிகழ்ச்சிகளுமே நேயர் களுக்கு புதுப்புதுத்தகவல்களை வழங்குவதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தல்ல என்கிறார்.

வி------நேயர் சந்திரசேகரனின் கோரிக்கை மீனாவிடம் தெரிவிக்கப்பட்டது. பாராட்டுக்கு நன்றி.

ரா------மணமேடு எம் தேவராஜா பாச்ச ஒழிப்புப் போரில் இந்தியாவின் பங்கு பற்றி தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியரின் கட்டுரையும் மருத்துவர் கோபனிஸ் ஆற்றிய அருந்தொண்டு பற்றி விரிவாகக் கூறிய கட்டுரையும் நன்றாக இருந்தது என்று பாராட்டிவிட்டு, இந்த இரண்டு கட்டுரைகளையும் சீனத் தமிழொலியில் வெளியிட வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார்.

வி-----நேயர் மணமேடு தேவராஜாவின் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிக்கிறோம்

ரா-----சீன உணவு அரங்கத்தில் பொறிக்கப்படும் மாண்டரின் மீன் என்ற உணவு வகையைப் பாராட்டி விட்டு சீனர்களுக்கு வடை அடுவது பற்றி ராஜாராம் கற்றுத்தரலாமே என்கிறார்.

வி------அப்படியா, ராஜா உங்களுக்கு வடை கூடத் தெரியுமா

ரா------எனக்கு வடை தின்னத்தான் தெரியும். ஆனால் சீன உணவு விடுதியில் கோதுமைமாவும் முட்டையும் கலந்து அருமையான வடை உளுந்த வடை போலவே நடுவில் ஓட்டையுடன், சுடுகிறார்கள்.