• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-25 07:51:38    
தேங்காய் சிற்றுண்டி

cri

கலைமகள்—இன்றைக்கு, சீனாவின் தென்பகுதியிலுள்ள குவாங்துங் மாநிலத்தின் மக்களுக்கு விருப்பமான ஒரு தேங்காய் சிற்றுண்டியை அறிமுகப்படுத்துவேன். உருண்டை வடிவமான இந்த சிற்றுண்டி இனிப்பானது.

ராஜாராம்—தேங்காய் திண்பன்டமா? தமிழகத்தின் மக்கள் அடிக்கடி தேங்காயைப் பயன்படுத்தி பலவகை திண்பன்டங்கள் செய்து, தின்0கின்றனர்.

கலைமகள்—அப்படியா?இன்று நான் அறிமுகப்படுத்தும் சீன தேங்காய் பலகாரத்தை அவர்கள் சுவைக்கலாம்.

ராஜாராம்—சரி, அதற்கு தேவைப்படும் பொருட்களை சொல்லுங்கள்.

கலைமகள்—தேங்காய் துருவல் 270 கிராம், மாவுச் சர்க்கரை 100 கிராம், பால் 60 கிராம், முட்டை மஞ்சள் கரு 80 கிராம், முதலியவற்றை முன்கூட்டியே எடுத்து வையுங்கள்.

ராஜாராம்—சரி, இந்தப் பொருட்கள் எல்லாம் தயாராக இருக்கின்றன. நான் மீண்டும் சொல்கின்றேன். தேங்காய் துருவல் 270 கிராம், மாவுச் சர்க்கரை 100 கிராம், பால் 60 கிராம், முட்டை மஞ்சள் கரு 80 கிராம், எல்லாம் தயராக இருக்கிறது. கலைமகள், இனி, சமையல் முறை நீங்கள் சொல்லுங்கள்.

கலைமகள்—இதன் சமையல் முறை ரொம்ப எளிது. முதலில், தேங்காய் துருவலை உருண்டையாகப் பிடிக்க வேண்டும். வெண்ணெய், மாவுச் சர்க்கரை, முட்டை மஞ்சள் கரு, பால், தேங்காய் துருவல் ஆகியவை, ஒழுங்காக ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, நன்றாக கிளறி, பிசைந்த மாவு பக்குவத்திற்கு வந்த பிறகு, உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.

ராஜாராம்—சிறுசிறு உருண்டைகளாக கையால் பிடிக்கணும், சரிதானே கலைமகள்.

கலைமகள்—சரி தான். தின்பண்டத் தயாரிப்பில் இந்த வேலை, கொஞ்சம் கஷ்டம். வெண்ணெய் சேர்க்கப்பட்டதால், வழுவழுப்பாக இருக்கிறது. பரவாயில்லை, மெதுவாக செய்யுங்கள்.

ராஜாராம்—ஆமாம். பந்து வடிவில் மஞ்சள் நிறமான தேங்காய் உருண்டை மேலும் அழகாக இருக்கிறது. சுமார் 30 உருண்டைகள் பிடித்துள்ளோம். கலைமகள் அப்புறம் என்னென செய்யணும்?

கலைமகள்—அப்புறம், இந்த தேங்காய் உருண்டைகளை தட்டில் வைத்து, தட்டை, கேக் அடுப்பில் வைத்து, 140 டிகிரி வெப்பத்தில் 35 நிமிடம் வேக வேண்டும். பிறகு, தேங்காய் உருண்டை பொன் நிறமாக மாறிவிரும். நல்ல சுவையான வாசனை காற்றில் கலந்து வருகிறது.

ராஜாராம்—ஓ, சூப்பர் சுவை.

கலைமகள்—ஆமாம். இந்த தேங்காய் இனிப்பு, குவாங்துங் மாநிலத்தில் மிகவும் பிரபலமானது. ஓய்வு நேரத்தில், மாலை வேளையில் சேர்ந்து அமர்ந்து, காப்பி அல்லது தேனீருடன் இந்த சிற்றுண்டியைச் சாப்பிடுகின்றார்கள்.

ராஜாராம்—அப்படியா! நமது நேயர்கள் மாலை டீ குடிக்கும் போது இதைத் தின்னலாம்.

கலைமகள்—ஆமாம். கடந்த சில வாரங்களாக நாங்கள் சீனாவின் பலவகை சைவ உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

ராஜா—ஆமாம். முட்டை கலந்த சைவ உணவு.

கலைமகள்—அடுத்த வாரத்தில் ஒரு வகை சிறப்பான வறுவல் சொல்வேன்.

ராஜாராம்—அதன் பெயர் என்ன?

கலைமகள்—அதன் பெயர், தக்காளி கோப்பை. இதற்கு தக்காளி, காளான், கோழிக்கறி, சோறு முதலியவற்றை முன்கூட்டியே எடுத்து வையுங்கள்.