• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-25 07:50:49    
மணமக்கள் தொடர்பு மையங்களில் பணியாளர்

cri
சீனாவில், மணமக்கள் தொடர்பு மையங்களில் பணியாளர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயதுப் பெண்களாக உள்ளனர். அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய அனுபவங்கள் உண்டு. எனவே பொறுமையுடனும் கவனமாகவும் பணி புரிய முடிகின்றது.

சுங் லியேன் சியாங் என்பவர் வடகிழக்கு சீனாவில் உள்ள தா லியேன் நகரில் ji xiang yuan எனும் மணமக்கள் தொடர்பு மையத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணி புரிகின்றார். பல்வகை மக்களைச் சந்தித்த அவர் தமது பணி பற்றிப் பேசுகையில், சில வேளைகளில், சில பெண்கள் பணக்காளர்களை தேடி தர வேண்டும் என்றும், சில வயதான ஆண்கள் இளமையான அழகான பெண்களைத் தேடித்தர வேண்டும் என்றும் கூறுகின்றனர். அப்போது, அவர் பொறுமையுடன் அவர்களுக்கு அறிவுரை செய்கின்றார். அழகும் பணமும் வாழ்க்கையின் முழு பகுதி அல்ல. நெருங்கிய விருப்பத்துடன் செய்யும் திருமணத்தில் தான் இன்பமான வாழ்ககை கிடைக்கும் என்று கூறினார். தவிர, சில இளைஞர்கள் திருமணம் செய்த பிறகு, குடும்ப வாழ்க்கையில் சிறு விஷயங்களினால் அடிக்கடி சச்சரவு செய்கின்றனர். ஆகையால், அவர் இத்தகைய மணமக்களுக்கு வாழ்க்கை பற்றிய ஆலோசனைகளை வழங்குகின்றார்.

அவர்களின் நடைமுறை நிலைமைக்கு ஏற்ப ஆலோசனை வழங்குகின்றேன். எடுத்துக்காட்டாக, கருவுற்ற பெண்கள் மிக எளிதாக களைப்படைந்து விடுகின்றனர். குழந்தைக்கு உயிர் வழங்குவது என்பது மாபெரும் கடமை. ஆகையால் கணவன் களைப்பாக இருந்தாலும், மனைவியை சீராக பாதுகாத்து, சில வேளையில் அவளுடைய தவறுகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுகின்றேன். பொதுவாக, மணமக்கள் எமது கருத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றார் அவர்.

XING TIAN XING எனும் ராணுவ அதிகாரி JI XIANG YUAN மையம் மூலம் தனது மனைவியை சந்தித்தார். அவர் கூறியதாவது

JI XIANG YUAN மையத்தின் புகழை கேட்ட பிறகு, இங்கே வந்தேன். என் மனைவி தா லியேன் நகரில் ஒரு தொழில் நிறுவனத்தில் நிதி அதிகாரியாகப் பணி புரிகின்றார். தற்போது, நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலிக்கின்றோம் என்றார் அவர்.

27 வயதான லியு பிங்கும் இந்த முறையில் காதலியைக் கண்டுபிடித்தார். அவர் பெய்ஜிங்கில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிகின்றார். திங்கள் வருமானம் 20 ஆயிரம் யுவானாகும். கடந்த ஆண்டு பெய்ஜிங்கிலுள்ள ஒரு மணமக்கள் தொடர்பு மையத்தில் தனது தகவல்களையும் தேவைகளையும் வழங்கினார். விரைவில், தமது காதலியை கண்டுபிடித்தார். அவர் கூறியதாவது

எனக்கு பணிச் சுமை மிகவும் கடுமையானது. ஓய்வு நேரம் குறைவு. மணமக்கள் தொடர்பு மையம் எனது பிரச்சினையைத் தீர்த்து வைத்தது. அங்கே எனது தேவைக்கு ஏற்ற இளம் பெண் அதிகம். தற்போது, காதலியைக் கண்டுபிடித்துள்ளேன் என்றார் அவர்.