• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-23 10:52:12    
நூறு வயதை தாண்டிய உலகின் மூத்த தம்பதி

cri

சாதாரணமாக நூறு வயதுவரை உயிரோடு வாழ்வது என்பது அதிசயம். அதிலும் தம்பதிகளாக இந்த வயதை எட்டிப்பிடிப்பது சாதாரண விஷயமல்ல. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெர்சி-பிளாரன்ஸ் ஆரோஸ்மித் தம்பதி கடந்த ஜுன் மாதம் நூறு வயதை தாண்டி உலகின் மூத்த தம்பதிகளாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்கள். மெர்சிக்கு நூற்று ஐந்து வயதும், ஆரோஸ்மித்துக்கு நூறு வயதும் ஆகி இருந்தது. ஆனால், இந்த தம்பதிகளால் சில வார காலமே சாதனை தம்பதிகளாக இருக்க முடிந்தது. இதற்கு காரணம் ஆரோஸ்மித் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து போனார்.

இதனால் தற்போது உலகின் மூத்த தம்பதி என்ற பட்டம் அமெரிக்காவில் பிலடெல்பியாவில் வசிக்கும் ஹர்பெர்ட்-மாக்டா பிரவுன் தம்பதிக்கு போய்விட்டது. இந்த தம்பதியும் முறையே 105, 100 வயதில் வாழ்ந்து வருகிறார்கள்.

வீடு மாறியதை மறந்து போன நாய்

ஒரு நாய் தன் எஜமானர் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இருந்து போது ஜன்னல் வழியாகத் தாவிக்குதித்து தோட்டத்துக்குச் செல்லும்.

எஜமானர், தரைத் தளத்தில் இருந்து வீட்டை ஆறாவது மடிக்கு மாற்றிவிட்டார்.

இதை மறந்தவிட்ட நாய் வழக்கம் போல் ஜன்னலில் இருந்து தாவிக்குதித்தது. 3 மாடிகள் கீழே இருந்து பக்கத்து வீட்டு பால்களியில் விழுந்தது. ஆனால் அந்த வீட்டார் விடுமுறையில் வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் நாயின் எஜமானர் தீ அணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் ஏணி மூலம் நாயை மீட்டனர்.