
சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இனம் சுவான் இனமாகும். இதன் மக்கள் தொகை ஒரு கோடியே 50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. குவான் சி சுவான் இனத் தன்னாட்சி பிரதேசத்தில் வசிக்கும் இவ்வினம், பாடலை மிகவும் விரும்பும் இனமாகும். பாடலானது இந்த மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது. தாங்கள் கண்டது கேட்டது என எல்லாவற்றையும் பாடலின் மூலம் வர்ணிக்கின்றனர். சந்திர நாள்காட்டியின் படி ஒவ்வொரு ஆண்டின் மார்ச்சு 3ந் நாள், சுவான் இன மக்களின் பாடல் விழாவாகும். இந்நாளில், அவர்கள் அழகிய ஆடை அணிந்து, விழாவில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் வண்ணக் கட்டிடங்களை கட்டியமைத்து, பாடல் போட்டி நடத்தி, வண்ணப் பந்தை எறிந்து, காதலியைத் தேர்ந்தெடுப்பார்கள். மலை பாடலை பாடுவது என்பது, மிக முக்கியமான நடவடிக்கையாகும். ஆசை தீர ஆடிப்பாடி, தனது வாழ்க்கையை வெளிப்படுத்தி, காதல், நட்புறவு, இயற்கை ஆகியவற்றைப் போற்றுகின்றார்கள்.
|