• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-29 20:57:23    
குத்துச் சண்டையில் சீனாவின் முன்னேற்றம் (1)

cri

அண்மையில் தென் மேற்கு சீனாவிலுள்ள மியன் யாங் நகரில் நடைபெற்ற 13வது உலக குத்துச் சண்டைச் சாம்பியன் பட்டப் போட்டியில் சீன வீரர் சோ ஷி மிங் 48 கிலோகிராம் எடைப் பிரிவுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். உலகளாவிய குத்துச் சண்டைப் போட்டியில் சீன வீரக் தங்கப் பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

நீண்டகாலமாக, குத்துச் சண்டைத் துறையில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வீரர்கள் முக்கிய இடம் வகித்து வருகிறார்கள். ஆசிய வீரர்கள் இந்த விளையாட்டில் வெற்றி பெறுவது மிகவும் அரிது. முன்பு சீனாவில் இத்துறையில் அக்கறை காட்டுவோர் அதிகமில்லை. ஒரு காலகட்டத்தில் இந்த விளையாட்டு தடுக்கப்பட்டது. ஏனென்றால் இது மனிதநேயமற்றது என்று கருதப்பட்டது.

1986ஆம் ஆண்டுக்குப் பிறகு தான், சீனவில் ஓய்வு நேர குத்துச் சண்டை விளையாட்டு மீட்கப்பட்டது. இருப்பினும் 2000ஆம் ஆண்டுக்கு முன், உலக குத்துச் சண்டை அரங்கில், சீன வீரர்கள் நல்ல சாதனை பெறுவதில்லை. 1996ஆம் ஆண்டு அட்லாண்டிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 91 கிலோகிராம் எடைப் பிரிவில் சீன வீரர் ஒருவர் 5வது இடத்தை பெற்றது அப்போதைய சீனாவின் மிக சிறந்த சாதனையாகும்.

ஆனால், நவம்பர் திங்கள் 20ஆம் நாள் நிறைவடைந்த 13வது உலக குத்துச் சண்டை சாம்பியன் பட்டப் போட்டியில் சீன வீரர் சோ ஷி மிங் 48 கிலோகிராம் எடைப் பிரிவுப் போட்டியில் ஹாங்கேரியின் வீரர் Pal Bedak ஐத் தோற்கடித்து, இந்த விளையாட்டுத் துறையில் சீனாவின் முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இந்தப் போட்டியில் சீன வீரர் சோ ஷி மிங் தனது திறனை முழுமையாக வெளிப்படுத்தினார். பெரும் மேம்பாட்டுடன் இந்த வெற்றியைப் வென்றார்.

அவருடைய வெற்றி, சீனாவின் குத்துச் சண்டைத் துறையினரின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குத்துச் சண்டைப் போட்டியில் சீன குத்துச் சண்டை வீரர்கள் வெற்றிகரமாக விளையாடும் மன உறுதியையும் வலுப்படுத்தியுள்ளது என்று சீன ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் சுய் தா லின் இப்போட்டிக்குப் பிறகு செய்தியாளரிடம் கூறினார்.