• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-01 10:17:29    
குத்துச் சண்டையில் சீனாவின் முன்னேற்றம் (2)

cri

70 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 400க்கும் அதிகமான வீரர்கள் இந்தச் சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்துகொண்டனர். குத்துச் சண்டைத் துறையில் கியூபா, ரஷியா, அசர்பைஜான் முதலிய வலுவான நாடுகள் திறமைமிக்க அணியினரை அனுப்பின. சீன வீரர் சோ ஷி மிங் இந்த வெற்றியை பெற்றப் போக்கில் பல புகழ்பெற்ற வீரர்களைத் தோற்கடித்தார். அவர்களில் ஓய்வு நேரக் குத்துச் சண்டைத்துறையில் உலகில் முதலிடம் வகிக்கும் கியூப்ப அணியின் தலைவரும், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றவருமான YAN BARTELEMY VALERA இடம் பெறுகின்றார்.

இந்தப் போட்டியின் இதர எடைப் பிரவுகளிலும் சீன வீரர்கள் வேறுபட்ட அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். 54 கிலோகிராம் எடைப் பிரிவில் சீன வீரர் மா யுன் ஹௌ 5ஆம் இடத்தை பெற்றார். 91 கிலோகிராமுக்கு மேல் எடைப் பிரிவில் சீன வீரர் சாங் சி லே 5வது இடம் வென்றார். அதேவேளையில் சீனாவின் வேறு மூன்று வீரர்கள் முதல் எட்டு வீரர் அணியில் நுழைந்தனர். இது சீன அணி உலக சாம்பியன் பட்டப் போட்டியில் பெற்ற மிக சிறந்த சாதனையாகும்.

சீனாவின் குத்துச் சண்டைத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் கண்டுள்ள முன்னேற்றம் உலக குத்துச் சண்டை அரங்கில் பரவலாக கவனிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் குத்துச் சண்டைத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது, அத்துடன் அதற்கு மிக சிறந்த எதிர்காலமும் உண்டு என்று இந்தச் சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்துகொண்ட சர்வதேச குத்துச் சண்டைத் துறைப் பிரமுகர்களும் பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்களும் ஒருமனதாக கருதுகின்றனர்.

இந்த போட்டியைப் பார்த்தால், தற்போது, ஓய்வு நேரக் குத்துச் சண்டைத் துறையில் கியூபாவும் ரஷியாவும் மிக வலுவான நாடுகள். ஆனால், சில நாடுகள் இத்துறையில் ஓங்கிவளர்ந்து வருகின்றன. அவற்றில் சீனா குறிப்பிடத்தக்கது என்று ரஷிய குத்துச் சண்டைச் சங்கத்தின் தலைவர் EDOUARD KHUSAINOV கூறினார்.

சீனக் குத்துச் சண்டை வீரர்களின் உடல் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் அவர்களின் நுட்பம் மிக உயர் தரமுடையது. 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு அவர்கள் போதிய அளவு ஆயத்தப் பணி செய்துள்ளனர். அப்போது அவர்கள் மேலும் பக்குவமடைந்து, இதர அணிகளை வியக்கச் செய்யும் ஒரு அணியாக மாறிவிடும் என்று ஹாகேரியைச் சேர்ந்த சர்வதேச நிலை நடுவர் CSOTONVIC SANDOR கூறினார்.