வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.
தமிழ் மூலம் சீனம் என்ற நூலின் மூன்றாம் பாடத்தை நாம் இரண்டுமுறையாக படித்துள்ளோம். எப்படி கிரகித்துக் கொண்டீர்கள். சில முக்கிய வாக்கியங்கள் தங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா?எங்கேயாவது புரியவில்லை என்றால் கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் எங்களிடம் மீண்டும் கேட்கலாம். உங்களை எப்பொழுதும் வரவேற்கின்றோம்.
இன்று நாம் புதிய பாடமான நான்காவது பாடத்தைக் கற்றுக்கொள்ளத் துவங்குகின்றோம்.
நான்காவது பாடத்தில், ஒப்புதல் அளிப்பது, மறுப்பது ஆகியன இடம்பெறுகின்றன.
முதலில் மூன்று சொற்களைப் பார்க்கின்றோம்.
தமிழ் மூலம் சீனம் என்ற பாட நூலை திறந்து இருபதிமூன்றாம் பக்கத்தின் மேல் பகுதியைப் பாருங்கள்.
முதலாவது சொல்,(ஹௌ மா, HAO MA)என்னுடன் சேர்ந்து படியுங்கள்.
இந்த சொல்லின் பொருள் "முடியுமா?"என்பதாகும். பொதுவாக மற்றவரின் கருத்தை அல்லது அனுமதியைக் கேட்கும் போது இது பயன்படுத்தப்படுகின்றது.
இந்த சொல்லுடன் ஓரே பொருள் கொண்டிருக்கும் இன்னும் இரண்டு சொற்கள் உண்டு. அவை வருமாறு.
(XING MA, சிங் மா,)(KE YI MA, கெ யி மா)
இந்த இரண்டு சொற்களின் பொருள் "முடியுமா?"என்பதாகும். ஆகவே, HAO MA? XING MA? KE YI MA?ஆகிய மூன்று சொற்களும் ஒரு பொருள். தமிழ் மொழியில் "முடியுமா" என்பதாகும். எதிர் தரப்பினர் பதிலளிக்கும் போது, பொதுவாக"முடியும்",அல்லது"முடியாது"என்று சொல்லுவார்கள். பொதுவாக கேள்வி கேட்பவர் "முடியும்"என்ற பதிலை எதிர்பார்க்கின்றார்.
இப்பொழுது ஒரு உரையாடலை பார்க்கின்றோம்.
முதலில்—
WO CHU QU YI HUI ER, HAO MA?
HAO!
இந்த உரையாடலின் பொருள் வருமாறு—
நான் சற்று வெளியே போக வேண்டும், பரவாயில்லையா?
சரி, பரவாயில்லை.
இப்பொழுது விளக்கம் சொல்லுகின்றோம், WO CHU QU YI HUI, HAO MA?என்ற வாக்கியத்திலுள்ள "WO"என்றால் நான் என்பது பொருள். "CHU QU"என்றால் வெளியோ போவது என்பது பொருள். "YI HUI ER"என்றால் சற்று நேரம் என்பது பொருள். HAO MA?என்றால், முடியுமா என்பது பொருள். 好என்றால் சரி என்பது பொருள்.
இன்று நாங்கள் மூன்று சொற்களையும் ஒரு உரையாடலையும் படித்துள்ளோம். பாடத்துக்குப் பின், கண்டிப்பாக பயிற்சி செய்யுங்கள். இத்துடன் இன்றைய பாடத்தை முடித்துக்கொண்டு விடைபெறுகின்றோம். நன்றி வணக்கம்.
|