• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-30 14:00:20    
சூறாவளிக் குழந்தைகள்

cri

புயலும் சூறாவளிக்காற்றும் சேர்ந்து தாக்கியதில் தெரு எல்லாம் வெள்ளாக்காடாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மக்கள் என்ன செய்வார்கள். வீட்டுக்குள்ளேயே முடங்கித் கிடப்பார்கள். அப்படித்தான் கடந்த ஆண்டு அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தை புயல் தாக்கிய போது நடந்தது.

விளைவு அடுத்த 9 மாதத்தில் தெரிந்தது. புளோரிடாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நிறைய குழந்தைகள் பிறந்தன. இப்பிடிப் பிறந்த குழந்தைகளை சூறாவளி பேபி என்று தான் அழைக்கின்றார்கள்.

வீடு மாறியதை மறந்து போன நாய்

ஒரு நாய் தன் எஜமானர் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இருந்து போது ஜன்னல் வழியாகத் தாவிக்குதித்து தோட்டத்துக்குச் செல்லும்.

எஜமானர், தரைத் தளத்தில் இருந்து வீட்டை ஆறாவது மடிக்கு மாற்றிவிட்டார்.

இதை மறந்தவிட்ட நாய் வழக்கம் போல் ஜன்னலில் இருந்து தாவிக்குதித்தது. 3 மாடிகள் கீழே இருந்து பக்கத்து வீட்டு பால்களியில் விழுந்தது. ஆனால் அந்த வீட்டார் விடுமுறையில் வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் நாயின் எஜமானர் தீ அணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் ஏணி மூலம் நாயை மீட்டனர்.

மதுபான விளம்பரத்துக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு

வெனிசுலா நாட்டில் உள்ள ஒரு மதுபான கம்பெனி தான் தயாரிக்கும் பீருக்கு, பெலிவிஷனில் புதுமையான முறையில் விளம்பரம் செய்தது. அந்த கம்பெனியின் விளம்பரவாசகத்தில் மனைவிக்கும் காதலிக்கும் இடையேயான வித்தியாசம் 30 கிலோ என்று கூறப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு அங்குள்ள பெண்ணுரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொதிகத்து விட்டனர். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விளம்பரம் செய்த மதுபான கம்பெனி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி வருகின்றார்கள்.

ஆனால், மதுபான கம்பெனி இந்த எதிர்ப்பை பொருட்படுத்த வில்லை. கோர்ட்டு சொல்லாதபட்சத்தில் நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டோம் என்று கூறியுள்ளது. இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

கிளைடர் விமானத்தில் உலகை வலம் வருகின்றார், ஒரு பெண்

கிளைடர் விமானத்தில் உலகத்தை 6 நாட்களில் சுற்றி வந்து சாதனை படைக்க செக் குடியரசு நாட்டு பெண் ஒருவர் திட்டமிட்டு இருக்கின்றார்.

செக் நாட்டு ஸ்போர்ட் ஏவியேஷன் சங்கத்தலைவர் வினாடிஸ்போவ் செஜ்டா இதை அறிவித்தார். அவரது மகள் ஹானா வயது 43. இந்த விமானத்தை செலுத்துகின்றார். இவர் ஏற்கனவே கிளைடர் விமானத்தில் ஐந்பத்துக்கும் மேற்பட்ட உலக சாதனைகளை நிகழ்த்தியவர் ஆவார். இவரும் இன்னொரு பெண் விமானியும் இந்த விமானத்தில் பறக்கின்றார்கள்.

இவர்கள் இருபத்திரண்டாயிரம் மைல் தொலைவுக்கு ஐந்து அல்லது ஆறு நாட்களில் உலகத்தை சுற்றி வருவார்கள்.