
சீனாவின் மங்கோலிய இனம் முக்கியமாக வடக்கிலான மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தில் வாழ்கின்றது. சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட இனம் மங்கோலிய இனமாகும். இதன் மக்கள் தொகை 40 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புல் செழுமையாக வளரும் போதும், கால்நடைகள் உடல்நலத்துடன் வளரும் போதும், புல்வெளியில் பாரம்பரிய விழாவான – நடாமு நடைபெறும். உள் மங்கோலியாவில் வசிக்கும் மங்கோலிய இன மக்களின் மிக முக்கிய விழா இதுவாகும். இது 3 நாள் நடைபெறுகின்றது. பல்வேறு இடங்களில், நடாமு விழாவின் போது, சீரான காலநிலைக்காக மக்கள் முதலில் காவு கொடுக்கின்றனர். பின்னர், மங்கோலிய இனத்தின் வலுவான வெளிப்படையான குணநலன்களை வெளிப்படுத்தும் குதிரைப் பந்தயம், மல்யுத்தம் ,அம்பு எய்தல் போன்றவை இடம்பெறுகின்றன. இரவில், மா தௌ எனும் இசைக் கருவியை இசைத்த வண்ணம், ஆண்கள் இறைச்சி உண்டு, மது அருந்துகின்றனர். பெண்கள் ஆடிப் பாடுகின்றனர்.
|