• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-28 17:26:56    
சீனப் பண்பாட்டில் பஞ்ச பூதங்கள்

cri

பல நூற்றாண்டு காலமாக சீன மக்கள் இந்தப் புவியை நான்கு பகுதிகளாக-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளாகவும், வசந்தம், இலையுதிர்காலம், கோடை, குளிர் என்று நான்கு பருவங்களாகவும், டிராகன், வெள்ளைப்புலி, சிவப்புப் பறவை, கருப்பு ஆமை என்று நான்கு விலங்குளாகவும் பிரித்தே பார்த்துவந்தனர். காலப் போக்கிலே, இவற்றுடன் மையப் பண்பு கொண்ட ஐந்தாவது அம்சம் ஒன்றும் சேர்ந்து கொண்டது. இறுதியில் மரம், நெருப்பு, மண், உலோகம், தண்ணீர் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் இந்தப் புவியை ஆட்டிப் படைக்கத் தொடங்கின. இவை இடைவிடாமல் உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகக் கருதப்படுகின்றன.

தமிழிலும் ஐம்பூதங்கள் என்று சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் அடிப்படையில் திருவள்ளுவர் பகுத்திருக்கின்றார். நிலம், நீர், நெருப்பு, வளி, விசும்பு என்று இப்புவியை ஐம்பெரும் ஆற்றல்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது தமிழர்களின் நம்பிக்கை. சீனப் பண்பாட்டின்படி ஐந்து பூதங்களும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகத் திகழ்கின்றன. இவற்றிலே நீர் பள்ளம் நோக்கிப் பாய்ந்து நிலத்தை ஈரப்படுத்துகிறது. நிலத்தில் ஈரம்பட்டு முளைக்கும் மரத்தின் விறகுகள் ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பு மூள்கிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்குள் புதைந்து உலோகமாக மாறுகிறது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்; ஓங்கி உயர்ந்து எரிந்து வெப்பத்தை உண்டாக்கும் தீ; வளைந்தும் நிமிர்ந்தும் வளரும் மரம்; பலவடிவங்களில் அடித்தும், வார்த்தும் உருவாக்கப்படும் உலோகம்: வளமான மண் இந்த ஐந்து மூலகங்களும் படைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, இவை ஒன்றை ஒன்று அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. எப்படி என்கிறீர்களா? மரம் நெருப்பை உண்டாக்குகிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்கு உரமாகி, உலோகமாக மாறுகிறது; உலோகக் கருவி கொண்டு பூமியைத் தோண்டி தண்ணீர் எடுக்க முடிகிறது. தண்ணீரால் புதிய மரங்கள் முளைக்கின்றன. இவற்றின் இந்த படைப்பாற்றலுக்கு எதிரான அழிவாற்றலைப் பார்க்கலாமா? தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. நெருப்பு உலோகத்தை உருக்குகிறது. உலோகம் மரத்தை வெட்டுகிறது. மரம் மண்ணைக்கீறி முளைக்கிறது. மண் தண்ணீரில் கரைகிறது.

சீன மக்களின் கருத்துப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் இந்த ஐந்து மூலகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஓராண்டின் ஐந்து பருவங்களும். ஐந்து நிறங்களும், ஐம்புலன்களும், ஐந்து சுவைகளும், எண்களும், உடல் உறுப்புக்களும் இந்த மூலகங்களுடன் இணைத்தே விளக்கப்பட்டன. வசந்த காலத்தில் மரங்கள் வளர்ந்து கோடை காலத்தின் மூலகமான நெருப்பை உண்டாக்குகின்றன. நெருப்பின் சாம்பல் மணணுக்குள் புதைந்து, இலையுதிர் பருவத்தில் கிணறு தோண்டுவதற்குத் தேவையான உலோகமாக மாறுகிறது. கிணறுகளில் இருந்து குளிர் பருவத்தின் மூலகமான தண்ணீர் கிடைக்கிறது.