வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். இன்றைய நிகழ்ச்சியில் ராஜாராம், தி, கலையரசி இருவரும் உங்களின் வினாகளுக்கு விடை அளிக்கின்றோம். கார் தயாரிப்பில் சீனா எந்த கொள்கையைப் பின்பற்றுகின்றது? கார் தயாரிப்பு துறையின் சீரான வளர்ச்சிக்கு சீன அரசு என்ன முயற்சி செய்கின்றது? இது தொடர்பாக உருப்படியான பயன்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்று சில நேயர்கள் கேட்கின்றனர்.
ராஜா....இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்க முதலில் "கார் வர்த்தகக் கொள்கை" பற்றிக் கூறலாம்.
கலை....சரி. கார் வர்த்தக நிர்வாக விதிகளையும் முறையையும் மேலும் முழுமையாக்கும் வகையில் சீன வணிக அமைச்சகம் அண்மையில் "கார் வர்த்தக கொள்கையை"வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கை ஒழுங்கான கார் சந்தை அமைப்பு முறையை உருவாக்கி நுகர்வோரின் உரிமையையும் நலனையும் பாதுகாத்து சீனாவின் கார் தயாரிப்புத் தொழில் ஒழுங்கான முறையில் வளர்வதற்கு ஊக்கம் தரக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ராஜா.....பொருளாதாரம் வளர்ச்சியடைந்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததும் சீனாவும் காரைப் பயன்படுத்தும் மற்றும் கார் உற்பத்தி செய்யும் முக்கிய நாடாகியுள்ளது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஜுலை திங்கள் வரை 30 லட்சத்து 30 ஆயிரம் கார்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. 29 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால் கார் வர்த்தகத் தொழிலின் வளர்ச்சியுடன் சில முரண்பாடுகளும் வளரத் தொடங்கிற்று.
கலை.....எந்த வகையான முரண்பாடுகள்?
ராஜா....ஒழுங்கற் சந்தை, போலியான பாகங்கள் போன்ற பிரச்சினைகள் தான்.
கலை....இந்த நிலைமையை மாற்றுவதற்காக சீன வணிக அமைச்சகம் என்ன முயற்சி செய்துள்ளது?
ராஜா....சீன வணிக அமைச்சகம் சமூகத்திலிருந்து கருத்துக்களை கேட்க ஆகஸ்ட் திங்களில் "கார் வர்த்தக கொள்கை"வெளியிட்டு அமலாக்கியுள்ளது.
கலை....எனக்கு புரிகின்றது. கார் விற்பனை, பழைய கார் விற்பனை கார் உதிரி பாகங்களின் விற்பனை, பயன்படாத கார்களின் விற்பனை, வெளிநாட்டுக் கார்களின் விற்பனை ஆகியவை பற்றி இந்த கொள்கையில் விபரமாக கூறப்படுகின்றா?
ராஜா....ஆமாம். இந்த கொள்கையில் சீனாவின் கார் வர்த்தக வளர்ச்சியின் திசை, குறிக்கோள், நிர்வாக அளவு, நிர்வாக முறை க்ட்டுக்கோப்பு ஆகியவை வரிசையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.....சீன இயந்திர தொழில் சம்மேளனத்தின் துணை தலைவர் சான் சியௌ யூ இது பற்றி என்ன கூறுகின்றார் என்று கேளுங்கள்
ராஜா...இந்தக் கொள்கை சீன கார் தயாரிப்புத் தொழிலின் வளர்ச்சியை பெரிதும் தூண்டியுள்ளது. வெளிநாடுகளை பொறுத்தவரை இந்த கொள்கையின் மூலம் உலக வர்த்தக அமைப்பில் சேரும் போது அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனக் கார் சந்தையை இனி வெளிநாடுகளுக்கு திறந்து வைக்க முடியும். உள்நாட்டு தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, சீனக் கார் தயாரிப்பு துறை சர்வதேச ரீதியில் போட்டியிடும் திறனை இந்த கொள்கை மூலம் உயர்த்தி நுகர்வோரின் தேவையை மேலும் திருப்தி செய்யலாம்.
|