
வூதைய் மலை
ஷாங்சி மாநிலம், சீனாவின் வட பகுதியில் அமைந்துள்ளது. சீனப் பௌத்த மதப் பண்பாட்டு மற்றும் தாவ் மதப் பண்பாட்டு வளர்ச்சியின் முக்கிய தளங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது. மதப் பண்பாடுகள் பலவிதமானவை. பௌத்த மதக் கட்டடம், சிற்பம், ஓவியம் ஆகியவை இம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. தவிர, ஷாங்சி மாநிலம், சீனப் பௌத்த மதத்தின் தொல் பொருள் களஞ்சியமும் ஆகும். சீனப் பௌத்த மத மரபுச் செல்வங்கள் நிறைந்த இடங்களில் இதுவும் ஒன்று. ஷாங்சியில் மதச் சுற்றுலாவுக்கு 3,4 நாட்கள் தேவைப்படும். வூதைய் மலை சீனாவின் வட பகுதியிலும் கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்திலும் அமைந்திருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலை மேற்கொள்வது நல்லது. வூதைய் மலையில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, கோயிலில் கிடைக்கும் காய்கறி உணவைச் சுவைத்துப் பாருங்கள். இவை, மதத்தவர்களின் உணவு. ஆனால் மலையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் மலையின் கீழிருந்து எடுத்துச்செல்லப்பட வேண்டியிருப்பதால் விலை சற்று அதிகமாக உள்ளது. சராசரியாக ஒரு நபருக்குச் சுமார் 50 யுவான் ழன்மின்பி செலவாகும்.

கடவுக்கு வழிபாடு செய்வது
|