• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-30 11:30:12    
நேயர்களின் நல்ல கருத்துகள்

cri
ரா-----நேயர் நேரம் நிகழ்ச்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது நேயர்களே. வி-----தாஜாஹாங். நேயர்களே. ஒரு வாரம் கழித்து உங்களோடு உரையாட வந்திருக்கிறேன். மகிழ்ச்சி, ராஜா கடிதங்களைப் பார்க்கலாமா ரா-----மணமேடு எம் தேவராஜா ஆகஸ்ட் 10 முதல் நவம்பர் 9 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றி எழுதிய கருத்துக் கடிதங்கள், சீனாவில் இன்ப்பயணம் நிகழ்ச்சி, சீன நாட்டிற்குள் சுற்றுலா செல்வது போன்ற உணர்வை ஏர்பந்துகிறது. பல சுற்றுலாத்தகவல்களை தருகிறது என்று கூறுகிறார். திருமண வாழ்க்கை பற்றிய நட்புப்பாலம் நிகழ்ச்சியில் காதல் பற்றிக் கூறப்பட்டது. பெற்றோர் நிச்சயித்த திருமணத்தில், திருமணத்திற்குப்பின் அல்லது நிச்சய தார்த்தத்திற்குப்பின் காதல் வாழ்க்கைத் தொடங்குவதே நமது பாரம்பரியம் என்று கூறிவிட்டு, உங்கள் குரல் நிகழ்ச்சியில் வானொலி சார்ந்தவற்றையே பேச வேண்டும் என்பது சரியல்ல. ஒரு கூட்டத்தில் 20 30 பேர் கலந்து கொள்ளும் போது, எல்லோரும் வானொலி பற்றியே பேசினால், திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தைச் சொன்னது போல இருக்கும், பல விஷயங்களைப் பேசிஎனால் சுவையாக இருக்கும் என்கிறார். ஜூன் திங்கள் நட்புப்பாலம் நிகழ்ச்சியில் இலங்கைப் பத்திரிகையாளர் முத்தையா அளித்த பேட்டியைக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளனர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எம் கருசாமி, 30 பள்ளிப்பட்டி என் கார்த்திகேயன், எஸ் தெய்வானை இவர்கள் சீனக் கதையில் ஒலிபரப்பான நாட்டுப்புற கதைகளையும் பாராட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டம் அணைத்தோட்டம் நேயர் பி சதீஷ் ஆகஸ்ட் 15 முதல் 21 வரை ஒலிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். வி-----நேயர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. ரா----புதிய நேயராக விரும்பி இரண்டு கடிதங்கள் வந்துள்ளன. ஈரோடு மாவட்டம் செம்பூத்தம் பாளையம் இ யோகராஜ் கொட்டியபாளையம் ப சிங்கர் கணேஷ் இருவரும் புதிய நேயராக விரும்புகின்றனர். வி------இவர்களுக்கு கூடிய விரைவில் நேயர் எண் அணுப்பப்படும். ரா-----மதுரை பேச்சியம்மாள் படித்துறை க ராமலிங்கம், தாம் நாள் தோறும் சீன வானொலி வழங்கும் உலகச் செய்திகள் நடுநிலையாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் பாராட்டி சீனாவும இந்தியாவும் எனது இரு கண்கள் என்கிறார். வி------நேயரின் உணர்வுகளைப் பாராட்டுகிறோம் ரா-----நந்தியாலம் நேயர்கள் நந்தினி யோகம்மாள் ஆகஸ்ட் 20ம் நாள் எழுதிய கடிதங்கள் இருவரும் சிறப்பு நேயர் விடி ரவிச்சந்திரனும் சீனப் பயண அனுபவங்களை வெளியிட்ட சீனத்தமிழொலி இதழ்களைப் பாராட்டியுள்ளனர். ஈரோடு எம் சி பூபதியும் சீனத் தமிழொலியை பாராட்டிவிட்டு, சீனச்சமூக வாழ்வு நிகழ்ச்சி நன்றாக இருப்பாகக் குறிப்பிட்டுள்ளார். நாகர்க்கோவில் ,ஸ்டாலின் ஆகஸ்ட் 26 அன்று தமிழ்ச் செல்வம் ஒலிபரப்பிய சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுரை அருனம் என்கிறார். ஊஞ்சலூர் என் பசுபதி வெங்கடேஸ்வரன் ஜூலை 7 சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியை பாராட்டுகிறார். திருச்சி அண்ணா நகர் வி டி ரவிசச்ந்திரன், ஜூலை முதல் வார நிகழ்ச்சிகள் மற்று தமது கருத்துக்களை எழுதியுள்ளார். தமிழ் ச்செல்வன் விளையாட்டுச் செய்திகளில் இப்போது ஒலிம்பிக் ஆயத்தப்பணிகள் பற்றி ஆரம்பத்திலேயே கூறுகிறார். கட்டுமானப் பயணிகள் வெகு தீவிரமாக நடைபெறுவதை ஒவ்வொருவாரமும் அறிய முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வி------நேயர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. சரி ராஜா அடுத்த கடிதம் ரா-----கோயம்புத்தூர் வட வள்ளியில் இருந்து கபாடன் என்ற மணிகண்டன் எழுதிய கடிதம், சீன வானொலியில் இனிமேல் அபத்தமான பாடல்களை ஒலிபரப்பாதீர்கள். தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கிராமயப்பாடல்களை அனுப்புங்கள் தேவைப்பட்டால் அவைப்புகிறேன் என்று எழுதிவிட்டு, தீ உண்டான கதை என்ற சீனக்கதை கற்பனையானாலும் அதில் வரலாற்று உண்மைகள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளன.