கலைமகள்—இன்றைய நிகழ்ச்சியில், தக்காளி கோப்பை என்னும் வறுவல் பற்றி கூறுவேன்.
ராஜா—அப்படியா?தக்காளியைப் பயன்படுத்தி ஒரு கோப்பை போல தயாரிப்பது, அல்லவா?
கலை—ஆமாம். இதன் தயாரிப்பு முறை, கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. நிறைய ஆயத்தம் செய்ய வேண்டும்.
ராஜா—சரி, முதலில், இதற்கு தேவைப்படும் பொருட்களை சொல்லுங்கள்.
கலை—தக்காளி நான்கு, கொஞ்சம் காளான், கோழிக்கறி, வெங்காயம், சோறு, மிளகு மாவு, உப்பு, நல்லெண்ணெய் முதலியவற்றை முன்கூட்டியே எடுத்து வையுங்கள்.
ராஜா—சரி, இந்தப் பொருட்கள் எல்லாம் தயாராக இருக்கின்றன. நான் மீண்டும் சொல்கின்றேன். நான்கு தக்காளி, கொஞ்சம் காளான், கோழிக்கறி, வெங்காயம், சோறு, மிளகு மாவு, உப்பு, நல்லெண்ணெய் முதலியவற்றை எல்லாம் தயராக இருக்கிறது. கலைமகள், இனி, சமையல் முறையை நீங்கள் சொல்லுங்கள்.
கலை—முதலில், கோழி இறைச்சியை நன்கு துருவ வேண்டும். காளானையும், துருவல், வெங்காயத்தையும் சிறிய சிறிய துண்டுகளாக அரிந்து, கோழிக்கறித்துருவலுடன் சேர்த்து தட்டில் வைத்து, கொஞ்சம் உப்பு, மிளகு மாவு, நல்லெண்ணெய், முதலியவற்றையும் சேர்த்து, கொஞ்சம் நீரை விட்டு, நன்றாக கிளற வேண்டும். பிறகு, இந்த கோழி இறைச்சி துருவல் அப்படியே சுமார் 30 நிமிடம் தனியாக வைக்கலாம். இந்த அரை மணி நேரத்தில் தக்காளிக் கோப்பைகளைத் தயாரிக்கலாமா?
ராஜா—சரி, நான்கு தக்காளிக் கோப்பைகளைத் தயாரிக்க வேண்டும். சரிதானே?
கலை—சரிதான். முதலில், தக்காளிகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு, ஒரு தக்காளியின் மூன்றில் ஒரு பகுதியை அரிந்து, தனியாக வைக்க வேண்டும். உள்ளே விதைகளை நீக்கி விட்டு, தக்காளியை ஒரு கோப்பை போல ஆக்குங்கள்.
ராஜா—ஓ! நன்றாக இருக்கிறது. நான்கு தக்காளிகளையும் இது போலவே, கோப்பையாக மாற்ற வேண்டும். அப்படித்தானே?
கலை—ஆமாம். நான்கு தக்காளிக் கோப்பைகளை தயாரித்த பிறகு, அவற்றுக்கு உள்ளே கொஞ்சம் சோறு வைக்கலாம்.
ராஜா—சரி. அப்புறம், கோழி இறைச்சி துருவலை உள்ளே வைக்கலாமா?
கலை—ஆமாம். கோழி இறைச்சி துருவலை, சோறுக்கு மேலே வைக்கலாம். கடைசியாக முன்பு அரியப்பட்ட பகுதியை பயன்படுத்தி மேலேவைத்து மடித்து மூட வேண்டும்.
ராஜா—சரி, இனி, இந்த அழகான தக்காளிக் கோப்பைகளை வேக வைக்கணுமா?கலைமகள், இது எப்படி வேகவிடணும்?
கலை—கடைசியாக, வாணலியில் நீர் விட்டு, தக்காளிக் கோப்பைகளை 20 நிமிடம் நீராவியில் வேகவிட வேண்டும்.
இந்த தின்பண்டம் பார்ப்பதற்கு மிகவும் அழகானது. கலைப்பொருள் போன்றது. வீட்டு விருந்தில் தயாரித்தால், விருந்தினர்கள் கண்டிப்பாக மயங்கிப் போவார்கள்.
ராஜா—ஓஹோ, அழகான தக்காளிக் கோப்பை என்ற பலகாரம் கண்டிப்பாக சுவையாக இருக்கிறது என நம்புகின்றேன்.
|