• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-02 19:49:33    
இளம் பியானோ இசைக் கலைஞர்

cri
ரென் சியேள லு என்பவர், 2005ம் ஆண்டின் 13வது ஆசிய பியானோ இசைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றவர். அண்மையில் அவர் தியாசின் மாநகரில் முதலாவது இசை நிகழ்ச்சியை நடத்தி, பெரும் வரவேற்பைப் பெற்றார்.

நேயர்களே, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, ரென் சியேள லு வாசிக்கும் பியானோ இசையாகும். அவர் இசைத்த பாடலின் பெயர், இலையுதிர்காலத்தின் கற்பனைக்கதை. 22 வயதான ரென் சியேள லு, தியான் சின் இசை கல்லூரியில் பியானோ இசைக்கக் கற்றார். பியானோப் படிப்பு அனுபவத்தை நினைவு கூர்ந்த போது, அவர் மகிழ்ச்சியடைந்தார். நான்கு வயதில் ஒரு தற்செயலான வாய்ப்பில் பியானோ வாசிப்புடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. கலைஞர்கள் பியானோவை சுதந்திரமாகவும் சுலபமாகவும் வாசிப்பதுடன், சில இனிமையான இசை வருகின்றது என்பதைப் பார்த்து, அவர் பரவசமடைந்தார். பியானோ வாசிப்பைக் கற்க விரும்பினார். இதனால், அவருடைய விருப்பத்தின் படி, பியானோப் படிக்க அப்பா அனுமதித்தார்.

ரென் சியேள லு கூறியதாவது:

அப்போது, பலர் பியானோ வகுப்பில் சேர்ந்தார். ஆனால், நான் மட்டுமே உறுதியாக நிற்கின்றேன் என்றார் அவர்.

சிறிய வயதில் விளையாட்டாக படித்த போதிலும், ரென் சியேள லுவின் தந்தை, இசையில், அவருக்கு உள்ள திறனைக் கண்டறிந்தார். மகளுக்குக் கற்பிக்க, பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் இசை பேராசிரியர் யாங் சியேளவை அவர் அழைத்தார். ரென் சியேள லுவின் உள்ளார்ந்த இசை உணர்வையும், நுட்பமான இசைக் கருத்துகளையும் அவர் படிப்படியாக வெளிப்படுத்தியுள்ளார். 1999ம் ஆண்டில், ரென் சியேள லு, தியான் சின் இசை கல்லூரியைச் சேர்ந்த இடைநிலைப் பள்ளியில் சேர்ந்து, முறைப்படி சிறப்பு இசைக் கல்வியைத் துவங்கினார். அப்போதே, அவர் இசை மாளிகையில் நுழைந்து விட்டார் என்று ரென் சியேள லு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த இடைநிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு, இசை பற்றிய உணர்வில், எனது கருத்துக்களையும் சேர்த்தேன். சில இனிமையான இசை வடிவங்களை படிப்படியாக உணர்ந்தேன் என்றார் அவர்.

பியானோ வாசிப்பு நுட்பத்தையும் இசை அறிவையும் உயர்த்தும் பொருட்டு, அவர், உக்ரைனின் ஒட்டேசா இசைக் கல்லூரி, சீனாவின் மத்திய இசை கல்லூரி ஆகியவற்றில் சென்று கற்றுக்கொண்டார். அப்போது அவர் பரந்தளவில் இசை படைப்புகளை உருவாக்கி, உறுதியான அடிப்படை இட்டார். 2002ம் ஆண்டில் அவர் சிறந்த சாதனையுடன் தியான் சின் இசை கல்லூரியில் சேர்ந்தார். முயற்சியான படிப்புடன், அவர் வாசிப்பு நுட்பத்தை மேம்படுத்தி, தமது வாசிப்பு பாணியை உறுதிப்படுத்தினார். இவ்வாண்டு துவக்கத்தில் அவர் சீனாவின் சார்பில் 13வது ஆசிய பியானோ போட்டியில் கலந்துகொண்டு, இராண்டாவது பரிசு பெற்றார்.