• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-06 17:26:21    
வரவேற்கப்படும் பெய்சிங் ஒலிம்பிக் சின்னங்கள்

cri

பெய்சிங் ஒலிம்பிக் சின்னங்கள் வெளியிடப்பட்டதும் சீன மற்றும் வெளிநாட்டவர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. ஐந்து ஒலிம்பிக் வளையங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஐந்து குட்டி நண்பர்களும் சீனப் பண்பாட்டின் தனித்தன்மையைச் சித்திரிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஒரு திங்களுக்கு முன், பெய்சிங் ஒலிம்பிக் சின்னங்கள் எந்த மாதிரியாக இருக்கும் என்று மக்கள் கற்பனை செய்திருந்தனர். ஆனால் இப்பொழுதம், அவற்றை எந்த வழி முலம் வாங்கி பெற முடியும் என்பதில் தான் மக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஏனென்றால், இந்த ஐந்து குட்டி நண்பர்கள் அனைத்து சீன மக்களும் மிகவும் விரும்பியவர்களாக மாறியுள்ளனர். அவர்கள் பற்றிய பல நினைவுப் பொருட்கள் சினாவின் பல்வேறு இடங்களில் விற்பனையாகி வருகின்றன. பல இடங்களில் இந்த பொருட்கள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளன.

நவம்பர் 30ஆம் நாள் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்திலிருந்து வந்த ஒரு செல்வி பெய்சிங்கிலுள்ள வாங்புசிங் அங்காடிக்கு வந்து இந்த சின்னங்களின் வடிவமாக தயாரிக்கப்பட்ட கம்பளி ரோம விளையாட்டுப் பொம்மையை வாங்க விரும்பினார். ஆனால், "மன்னித்துக் கொள்ளுங்கள், அவை எல்லாம் விற்பனை ஆகிகிவிட்டது" என்று கடைப் பணியாளர் அவரிடம் தெரிவித்த போது, அவள் மிகவும் மனவருத்தமடைந்தார்.

பெய்சிங்கிலுள்ள ஒலிம்பிக் வணிகப் பொருட்களை விற்பதில் சிறப்பு அனுமதி பெற்றுள்ள சிதான் வணிகக் கட்டடம், கைவினை கலைப் பொருள் கட்டடம் உள்ளட்ட பல பெரிய கடைகளிலும் ஒலிம்பிக் சின்னங்களை குறிக்கும் விளையாட்டு பொம்மைகளும் பற்றாக்குறையாக உள்ளன. இருப்பினும் பல நகரவாசிகள் அடிக்கடி வந்து, அவை எப்பொழுது மீண்டும் வரும், எப்பொழுது விற்கப்படும் என்று வினவினார்கள்.

பெய்சிங் மட்டுமல்ல, ஷாங்கை, குவாங்சோ, செங்து உள்ளிட்ட சீனாவில் பல்வேறு இடங்களிலும் பெய்சிங் ஒலிம்பிக் சின்னங்களின் மாதிரியாக தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொம்மைகளை மக்கள் மும்முரமாக வாங்கும் பேரெழுச்சி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த ஐந்து குட்டி நண்பர்களான பெய்பெய், ஜிங்ஜிங், ஹுவான் ஹுவான், யிங்யிங், நீனி ஆகிய ஐந்தும், மீன், பாண்டா, ஒலிம்பிக் ஒளிப்பந்தம், திபெத் மறிமான், தூக்குணாங் குருவி ஆகியவற்றின் உருவங்களைத் தந்துள்ளன.

கடல், காடு, தீ, நிலம் ஆகியவற்றுக்கும் வான்வெளிக்குமிடையிலான உறவை அவை வெளிப்படுத்தியுள்ளன. மனிதருக்கும் இயற்கைக்குமிடையே இணக்கத்தையும், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பிரச்சாரம் செய்யப்பட்ட பச்சை ஒலிம்பிக் என்ற கருத்துடன் இசைவாக இருப்பதையும் அவை காட்டுகின்றன.