இவ்வாண்டின் முதல் பத்து திங்களில், சீனாவின் கார் ஏற்றுமதி, முதன்முறையாக, இறக்குமதியை விட அதிகம் என்று எமது செய்தியாளர் இன்று சீன வணிக அமைச்சகத்திலிருந்து தெரிவித்தார். இதற்கிடையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே வேளையில் இறக்குமதியான கார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரமாகும் என்று புள்ளி விவரம் காட்டுகின்றது. முக்கியமாக, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள வளரும் நாடுகளில் சீன கார்கள் விற்பனையாகின்றன. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா முதலிய வளர்ந்த நாடுகளிலிருந்து சீனா கார்களை இறக்குமதி செய்கின்றது.
|