• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-05 20:31:02    
பஞ்சபூதங்களும் வரலாறும்

cri
நிறம், சுவை, ஐம்புலன் ஆகியவற்றுடன் இந்த ஐந்து மூலகங்கள் எப்படிப் பொருந்தும் என்று கேட்கிறீர்களா? தண்ணீரின் திசை வடக்கு, சுவை உப்பு, நிறம் கருப்பு; நெருப்பின் திசை தெற்கு, சுவை கசப்பு, நிறம் சிவப்பு; மரத்தின் திசை கிழக்கு, சுவை புளிப்பு, நிறம் பச்சை; உலோகத்தின் திசை மேற்கு, சுவை காரம், நிறம் வெள்ளை; மண் மையத்திசையைக் கொண்டது. மஞ்சள் நிறமுடையது. இனிப்புச் சுவை இதற்கு உண்டு.

மனித உடம்பின் உறுப்புக்களுக்கும் இந்த பஞ்ச பூதங்களுக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில்தான் பாரம்பரிய சீன மருத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது. மரம் கண்கள், தசை நாண், கணையம், ஈரல் ஆகிய உடல் உறுப்புக்களோடு இணைந்து கோபத்தை உண்டாக்குவது. நெருப்போ நாக்கு, ரத்த நாளங்கள் சிறு குடல், இதயம் ஆகியவற்றுடன் சேர்ந்து இன்பத்தைத் தருவது. வாய், தசை, வயிறு, கணையம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள மண், கவலைக்குக் காரணமாகிறது. உலோகமோ, மூக்கு, உடம்புரோமம், பெருங்குடல், நுரையீரல் ஆகியவற்றுடன் சேர்ந்து துக்கத்தைத் தருகிறது. காதுகள், எலும்புகள், சிறுநீரகம், ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தண்ணீர் அச்சத்துடன் தொடர்புடையது.

தாவோ மதம் உருவெடுத்ததும் இந்த பஞ்ச பூதங்களுக்கு எண்கள் ஒதுக்கப்பட்டன. ஒன்று, ஆறு ஆகிய இரண்டு எண்கள் தண்ணீருக்கும், இரண்டும் ஏழும் நெருப்புக்கும், மூன்றும் எட்டும் மரத்துக்கும் நான்கும் ஒன்பதும் உலோகத்திற்கும், ஐந்தும் பத்தும் மண்ணுக்கும் தரப்பட்டன. இவற்றில் ஒற்றைப்படை இலக்கங்கள் பூலோகத்துடனும், இரட்டைப் படை எண்கள் சொர்க்கத்துடனும் தொடர்புடையவையாகக் கருதப்பட்டன. ஒற்றைப் படை எண்கள் ஆக்கக்கூடியவை என்றும், இரட்டைப்படை எண்கள் அவற்றை நேர்த்தியாக்கி, பயனளிக்கச் செய்பவை என்றும் நம்பப்பட்டது.

இந்த பஞ்சபூதங்கள் கொள்கையை வரலாற்றுடனும் சீன மக்கள் பொருத்திப் பார்க்கின்றனர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோ யென் (Zhou Yen) என்ற தத்துவஞானி, அரச வம்சங்களின் வீழ்ச்சிக்கும், இந்த ஐந்து மூலகங்களுக்கும் தொடர்புடையதாகக் கூறியுள்ளார். சீன தேசத்தின் மூதாதையர் எனக் கருதப்படும் ஹூவாங்தி என்ற மஞ்சள் பேரரசரின் மூலகம் மண்ணாக இருந்தபடியால் மண் மரத்தால் வெல்லப்பட்டது. ஆம், மரத்தை மூலகமாகக் கொண்ட ச்சியா வம்சத்திடம் மஞ்சள் பேரரசர் தோற்றுப்போனார். சியா வம்சம், உலோகத்தை மூலமாகக் கொண்ட ஷாங் வம்சத்தால் தோற்கடிக்கப்பட்டது. சோ வம்சத்தின் நெருப்பை, தண்ணீரை மூலகமாகக் கொண்ட ஒரு வம்சம் வென்று, புதிய வரலாற்றுச் சுழற்சி ஏற்படும் என்று சோ யென் நம்பினார். ஒவ்வொரு வம்சமும் தனக்கென உள்ள மூலகத்தின் நிறத்தை அரச குல நிறமாக அறிவித்து, ஒரு நாள்காட்டியை வரையறுத்தது.