• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-08 09:09:32    
டென்னிஸ் அரங்கத்துக்கு திரும்பவுள்ள சிந்ஜிஸ்

cri

சுவீட்சர்லாந்தின் அளவரசி சிந்ஜிஸ் டென்னிஸ் அரங்கத்துக்கு திரும்ப உள்ளார். அத்துடன் இந்த முறை அவர் தற்காலிகமாக அல்ல, மகளிர் தொழில்முறை டென்னிஸ் அரங்கத்துக்கு அதிகாரப்பூர்வமாகவே மீண்டும் வருகின்றார். கால் காயம் காரணமாக, டென்னிஸ் அரங்கத்திலிருந்து விலகி 3 ஆண்டுகளை கழித்த அவர், 2006 போட்டிப் பருவத்தில், உலக மகளிர் தொழில்முறை டென்னிஸ் அரங்கத்துக்குத் திரும்புவதாக கடந்த நவம்பர் 29ஆம் நாள் அறிவித்தார்.

கால் காயம் காரணமாக எனது டென்னிஸ் தொழிலை வெகு முன்னதாக முடித்துக்கொண்ட போதிலும், இந்த துறையில் எனது ஆர்வம் குறையவே இல்லை. டென்னிஸ் தொழிலிலிருந்து விலகிய பிந்திய வாழ்க்கை மனநிறைவு அடைந்துள்ள போதிலும், டென்னிஸ் அரங்கத்தில் போட்டியிட்ட நாட்களை மறக்க முடியாது. போட்டி அரங்கத்துக்குத் திரும்பி, உயர்நிலை போட்டியில் கலந்துகொள்ள விரும்புகின்றேன் என்று நவம்பர் 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிந்ஜிஸ் கூறினார்.

இவ்வாண்டு 25 வயதான சிந்ஜிஸ் 1994ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் தொழில்முறை டென்னிஸ் அரங்கில் நுழைந்தார். குறுகிய காலத்தில் உலக மகளிர் டென்னிஸ் துறையில் வளர்ந்த ஒரு நட்சத்திரமாக அவர் விளங்கினார். 1997ஆம் ஆண்டு 16 வயதான அவர் WTA வரலாற்றில் மிகவும் இளைந்த ஒற்றையர் சாம்பியனாக மாறினார். அதற்கு பிந்திய 247 வாரங்களில் 209 வாரங்களாக உலகில் முதலிடம் வகித்து வந்தார்.

1997ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய டென்னிஸ் ஒப்பன் போட்டி, விம்பில்டன் டென்னிஸ் ஒப்பன் போட்டி, அமெரிக்க டென்னிஸ் ஒப்பன் போட்டி ஆகிய மூன்றிலும் அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். அத்துடன் பிரெஞ்சு டென்னிஸ் ஒப்பன் போட்டியிலும் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார். குறுகிய 9 ஆண்டுகாலத்தில் அவர் மொத்தம் 40 ஒற்றையர் சாம்பியன்களையும் 36 இரட்டையர் சாம்பியன்களையும் பெற்றிருந்தார். அவர் பெற்ற பரிசு தொகை ஒரு கோடியே 83 லட்சம் அமெரிக்க டாலராகும். 2006ஆம் ஆண்டு அவர் டென்னிஸ் அரங்கத்துக்குத் திரும்பிய பின், உலக மக்களை வியப்படைய செய்வார்கள் என்று நம்புகின்றோம்.