• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-07 09:57:11    
சில கருத்துகள்

cri
ரா-----பெரம்பலூர் மாவட்டம் உத்திரக்குடி நேயர் கலைவாணன் ராதிகா, ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகளை மதிப்பிட்டிருக்கிறார். நாளுக்கு நாள் சீனக்கதை நிகழ்ச்சி நூற்ருக்கு நூறு மதிப்பெண் போட வைக்கிறது என்று கூறி பாரம்பரிய நாட்டுப்புறக்கதைகளைப் பாராட்டியுள்ளார், ஆகஸ்ட் 18 அன்ரு குளோனிங் பர்றி செல்வதிதன் கட்டுரையைக் கேட்டபோது அறிவியல் பாடப்புத்தகத்தை புரட்டிப்பார்த்த திருப்தி ஏற்பட்டது. நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் நோய் தீர்க்கும் மருந்தே சில நேரங்களில் நோயாகிறது என்பதைக் கேட்டு வியந்து போனோம் என்று வியந்தோம். இருவரின் உரையாடல் மூலம் நல்ல கருத்துக்களைக் கூறியது நன்று என்று குறிப்பிட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் ராமியம்பட்டி நேயர் சீ பாரதி, ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி கருத்துத் தெரிவித்துள்லார். இன்பச் சுற்றுலா நிகழ்ச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு இடம் என்று மட்டும இருந்தால் போதும், களைப்பும் குழப்படும் இருக்காது என்கிறார். 30 பள்ளிப்பட்டி நேயர் என் கார்த்தி கேயன் ஜூன் 17 அன்று இந்து நாளிதழ் பத்திரிகையாளர் நிருபமாசுப்மணியன் சீனாவுக்கு வந்து அளித்த பேட்டியை பாராட்டியுள்ளார். வி------நேயர்களின் பாராட்டுக்கும் நன்றி நேயர் பாரதி இன்பச் சுற்றுச் கற்றுலா பற்றி கூறிய கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டோம் ரா-----சேலம் மாவட்டம் எஸ் நாட்டாமங்கலம் நேயர் ஏ மாதுராஜ் ஜூலை ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதிய கடிதம், குறிப்பாக, ரவிச்சந்திரன் சீனப்பயண அனுபவங்களை விளக்கும் சீனத் தமிழொலியில் நிழற்படங்கள் தத்ரூபமாக இருந்தன என்கிறார். மேலும், உங்கள் குரல் நட்புப்பாலம் அறிவியல் உலகம் போன்ற நிகழ்ச்சிகலையும் பாராட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் கொங்கம் பாளையம் கணேசன் நலவாழ்வுப் பாதுகாப்பு கண்ணி முன் உட்கார்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி கொன்னூர்கள். இதே போல தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் தீனமகளையும் கூறுங்கள் என்கிறார். ராசிபுரம் நேயர் கே குணசேகரன், ஜூன் திங்கள் நிகழ்ச்சிகலைப் பாராட்டியுள்ளார். வளவனூர் புதுப்பாளையம் செல்வம் தமது வான் அஞ்சலில் ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பற்றி கருத்துக்களை எழுதியுள்ளார். சீனக்கதை நிகழ்ச்சியில் குடிடிக் கதைகளாக ஒலிபரப்பக் கோருகிறார். நேயர் நேரத்தில், குறிப்பிட்ட சில நேயர்களின் கடிதங்கள் மட்டுமே படிக்கப்படுகின்றான என்று குற்றச் சாட்டை தவிடு பொடியாக்கும் வகையில் இப்போதெல்லாம் புதிய நேயர்களின் கடிதங்கள் நிறைய இடம்பெறு இன்றன என்று குறிப்பிட்டுள்ளார். வி-----நேயர்களிடையே நாங்கல் பாகுபாடு காட்டுவதில்லை. புதிய நேயர்களை புதிதாகப்பிறந்த குழந்தையாக நினைத்து செல்லம் கொஞ்சுகிறோம். புதிய நேயர்கள், புதிய நேயர்களாக மட்டுமே இருந்து விடக் கூடாது, தொடர்ந்து வளர்ந்து பழைய நேயர்களாக, பெரிய நேயர்களாக மாற வேண்டும். பாராட்டுக்கு நன்றி சரி, ராஜா, அடுத்து கடிதம். ரா------திருச்சி மாவட்டம் மணக்கால் நேயர் இரா அன்பழகன் ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதியுள்ளார். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி மிகவும் சரியான பாதையா நோக்கிச் செல்கிறது. பழைய பாடங்களை ஞாபகத்தில் வைக்க, பழைய உரையாடல்களை மீண்டும் கூறுவதை வரவேற்கிறேன் என்று எழுதியுள்ளார். 2008 ஒலிம்பிக் போட்டிக்காக ஒர் உலகம் ஒரே கனவு என்ற முழக்கம் உருவாக்கப்பட்டதை இவர் பாராட்டியுள்ளார். வி-----ஓர் உலகம் ஒரே கனவு, எல்லோரும் சேர்ந்து கனவு கண்டு, முயன்றால் அது நிச்சயம் நனவாகும். பாராட்டுக்கு நன்றி.