• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-09 17:35:26    
சுங்சின் ஹோ கோ

cri

பயணிகள் சுங்சின்கிற்கு வந்தால், கண்டிப்பாக ஹோ கோவை ருசிக்கின்றனர். இது சுங்சின் பயணத்தின் முக்கிய பகுதியாகிவிட்டது. ஹோகோ என்னும் உணவிலிருந்து பயணிகள் விருந்தோம்பல், நேர்மை ஆகியவை படைத்த சுங்சின் மக்களின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.

சில நூறு ஆண்டுகள் வளர்ச்சிக்குப் பின், பாரம்பரியத்தை நிலைநிறுத்தி, தனிச்சிறப்பை அதிகரிக்கும் அடிப்படையில் சுங் சின்னின் ஹோ கோ பல்வகையாக பெருகிவிட்டது. பல்வேறு நிலை நுகர்வோரின் தேவையை நிறைவேற்ற முடிகின்றது. முன்பு மீனவர்கள் கண்டுப்பிடித்த வடிவம் இன்னும் நிலவுகின்றது. இது இன்னும் சுங்சின் மக்கள் முதல் விருப்பமாக இருக்கின்றது. சுவை, மலிவு, எளிமை ஆகியவை இதன் தனிச்சிறப்பாகும். 2வது தலைமுறை ஹோ கோ உணவை விருப்பம் போலி தட்டி யெடுத்துவைத்து சாபிடலாம். பண்பாடு மற்றும் விடுதியின் சூழ்நிலையில் கவனம் செலுத்துகின்றது. மூன்றாவது தலைமுறை ஹோ கோவுக்கு தேவைப்படும் உணவு வகைகளில் மாசுபடாத பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கம். இது பற்றி தே சுவான் எனும் ஹோ கோ உணவு விடுதியின் தலைமை சமையல் கலைஞர் வாங் ஹோபின் கூறியதாவது,

எங்களுக்கு சிறப்பு உற்பத்தி மற்றும் பதனீட்டு தளங்கள் உண்டு. தவிர, எமது தே சுவான் சூப் தயாரிக்கும் போது, யுன் நான் மாநிலத்து சு சியன் பிரதேசத்தில் உள்ள இயற்கையான காளான் மற்றும் கோழியைப் பயன்படுத்துகின்றோம். மிகவும் ருசியாக உள்ளது என்றார் அவர்.

தற்போது, சுங்சின்னின் ஹோ கோவில், பீர் வாத்து, புளிப்பு மீன், ஊற்று நீர்க் கோழி, சீன மூலிகை மருந்து முதலிய பல்வகைகள் ஆகிவிட்டன. எடுத்துக்காட்டாக, ஒரு முறை ஒரு விருந்தினர் ஹோ கோவை சாப்பிட்ட போது, தவறாக பீரை வாணலியில் ஊற்றினார். திடீரென்று, இது சிறப்பான மணம் வீசியது. பிறகு, பீர் கலந்த சூப்பில் வாத்து இறைச்சியை சமைக்கும் வகை தோன்றியுள்ளது. பீர் வாத்து ஹோ கோ தனிச்சிறப்புடைய மணம் கொண்டது. தவிர, பசியைத் தூண்டுகின்றது.

சுங்சின் ஹோகோவின் மாசாலாக்கள் அதிகமாக இருக்கின்றது. Galic எண்ணெய், வினிகர் எண்ணெய், நல் லெண்ணெய் முதலிய 10க்கும் அதிகமான வகைகள் உண்டு.

சுங்சின்னின் ஹோ கோ மாபெரும் பொருளாதார பயன் தந்துள்ளது. புள்ளிவிவரங்களின் படி, தற்போது, சுங் சின் நகரில் சுமார் 10 ஆயிரம் ஹோ கோ உணவு விடுதிகள் இருக்கின்றன. ஆண்டுக்கு அவை 1500 கோடி யுவான் லாபம் சம்பாதிக்கும். சுங் சின் ஹோ கோ சங்கத்தின் தலைவர் ஹே யுங் சி அம்மையார் கூறியதாவது,

சுங் சின் ஹோ கோவின் வளர்ச்சி பல தொடர்புடைய தொழில்களை வளர்த்துள்ளது. எடுத்துக்காட்டாக, இதன் உற்பத்தி மற்றும் பதனீட்டு தளங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆகையால், கடந்த சில ஆண்டுகளாக ஹோ கோ சுங் சின் நகரத்துக்கு புகழ் தந்து, எமது நகரின் ஒரு சின்னமாக மாறியுள்ளது என்றார் அவர்.

தற்போது, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பல பிரதேசங்களிலும் சுங் சின் ஹோ கோ உணவு விடுதிகள் தோன்றியுள்ளன. சர்வதேசச் சந்தையில் இதன் போட்டி ஆற்றலை உயர்த்தி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சட்டப் பாதுகாப்பு பெறும் வகையில், சுங்சின் ஹோ கோ என்ற வணிக சின்னத்தை பதிவு செய்ய தேசிய வணிக சின்ன அலுவலகத்திடம் விண்ணப்பம் செய்ய சுங்சின் ஹோ கோ சங்கம் தயாராக இருக்கின்றது.