
தென் சீனாவின் குவாங் சி சுவோங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்நத நாபோ மாவட்டத்தில், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சுவோங் இனத்தின் ஒரு பிரிவான, கறுப்பு நிற ஆடை அணியும் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் உள்ளனர். நாபோ மாவட்டத்தில் வடக்கிழக்கு பகுதியிலான பெரும் மலைகளின் பத்துக்கு மேலான கிராமங்களில் சிதறி வாழும் அவர்கள், சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றான சுவோங் இனத்தின் சிறப்பு மிக்க இனத்தவராவர், கடந்த பல்லாண்டுகளாக வெளியுலகுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதும், ஆடை, திருமணம், உணவு முதலியவற்றில் தமக்குரிய பழக்க வழக்கங்களைத் தொடர்பு கடையிடிப்பதும், அவர்களின் தனிச்சிறப்பியல்பாகும்.
கறுப்பு நிறத் துணியை தோய்ந்து கொண்டிருக்கும் மகளிர் பணிபுரியும் போது எழுப்பும் சத்தமாகும். ஆண், பெண், முதியோர், குழந்தை எல்லாரும், ஆண்டுதோறும் நான்கு பருவ காலங்களிலும் கறுப்பு நிற ஆடை அணிகின்றனர்.
ஆடையின் முன்புறம், மத்தியிலிருந்து சம அளவில் பிரிக்கப்படும் ஆடையும், அசுலமான ஓரமுடைய காற்சட்டையும் ஆண்கள் அணிகின்றனர். கறுப்பு நிற துணியைத் தலைப்பாகையாக அணிகின்றனர். இடுப்பில், சிவப்புத் துணியை அல்லது சிவப்புப் பட்டுத் துணியை அணிகின்றனர்.
பெண்களோ, முன்புறத்தின் வலது பக்கம், இடது பக்கத்தை விட பெரியதாகும் ஆடையையும் அகலமான ஓரமுடைய காற்சட்டையையும், இடுப்பில் கறுப்பு நிறப்பாவாடையையும் அணிகின்றனர். கறுப்பு நிறத் துணியைத் தலைப்பாகையாக அணிகின்றனர். ஆடையின் ஓரம், சட்டைக்கை, ஆகியவற்றில் சிவப்பு அல்லது மஞ்சள் துணித்துண்டு தைக்கப்படுகின்றது. தலைப்பாகையை, முக்கோண வடிவ கோடு அலங்கரிக்கின்றது.
|