• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-13 21:08:10    
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ரஷியாவின் ஆயத்தப் பணி

cri

அடுத்த ஆண்டு பிப்ரவரி திங்கள் 10ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை இத்தாலியின் துர்லின் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ரஷியா 25 பதக்கங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவற்றில் 6 முதல் 8 தங்கப் பதக்கங்கள் அடங்கும் என்று ரஷியக் கூட்டாசி விளையாட்டுத் துறைத் தலைவர் ஃபெஜிசோவ் டிசம்பர் 7ஆம் நாள் கூறியுள்ளார். ரஷிய விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி, ரஷிய மக்களுக்கு மேலும் கூடுதலான மகழ்ச்சி தருவார்கள். குறிப்பாக பனிச்சறுக்கூர்தி நிகழ்ச்சியில் ரஷிய வீரர்கள் சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பு உண்டு என்று ஃபெஜிசோவ் கருத்து தெரிவித்தார்.

ரஷிய அணியின் தற்போதைய ஆயத்தப் பணி குறித்து, தாம் மனநிறைவு அடைவதாக தெரிவித்தார். ஆனால், ரஷிய அணிக்கு இன்னல் அதிகரிக்கும் ஊக்க மருந்து பிரச்சினை பற்றி அவர் தொடர்ந்தும் சற்று கவலையுடன் இருக்கின்றார். ரஷிய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து உட்கொள்ளாமல் தடுக்க, ரஷிய விளையாட்டுத் துறை அதிகாரிகள் இயன்றதனைத்தையும் செய்வார்கள். இது, அவர்களின் ஆரோக்கியத்துக்கும் எதிர்காலத்துக்கும் நல்லது. அத்துடன் நாட்டின் கௌரவத்தைப் பேணிக்காப்பதற்கானது என்றும் அவர் கூறினார்.

இன்றைய உலக விளையாட்டுத் துறையில் போட்டாப்போட்டி மிகவும் தீவிரமாக இருக்கின்றது. கடந்த ஆண்டில் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனா ரஷியாவைத் தாண்டியது. அத்துடன், ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் முதலிய நாடுகளும் விளையாட்டுத் துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. அவற்றின் போட்டியாற்றல் ரஷியாவுடன் நெருங்கியிருக்கின்றது. ரஷிய விளையாட்டுத் துறையினர் முழுமூச்சுடன் செயல்படாவிட்டால், சிறந்த சாதனை நிகழ்த்த முடியாது என்றும் அவர் கூறினார்.

விளையாட்டுத் துறையில் ரஷியாவின் வல்லரசு நிலையை நிலைநிறுத்த வேண்டும், ஏனென்றால், இது முழு நாட்டு மக்களின் குறிப்பாக இளைஞர்களின் போராட்ட உற்சாகத்துக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்று ஃபெஜிசோவ் கூறினார். 2002ஆம் ஆண்டு சோல்ட் லேக் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ரஷிய அணி 6 தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை பெற்று, மூன்றாம் இடத்தில் இருந்தது. இது வரலாற்றில் முதல் முறை. தவிரவும் ரஷிய வீராங்கனை லாதுதினா ஊக்கமருந்து உட்கொண்டதால், அவரின் தங்கப் பதக்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் திருப்பி எடுக்கப்பட்டது.