• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-14 09:59:09    
தமிழ் மூலம் சீனம் பாடம் 40

cri
வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.

கடந்த முறை நாம் நான்காம் பாடத்தின் முதலாவது பகுதியை படித்தோம். பாடத்துக்குப் பின் நீங்கள் பயிற்சி செய்தீர்களா? மனதில் பதிந்திருக்கின்றதா?

முதலில் கடந்த முறை படித்ததை நாம் மீண்டும் பார்க்கின்றோம்.

HAO MA?

XING MA?

KE YI MA?

இந்த மூன்று சொற்களும் ஒரே பொருள். முடியுமா என்பது பொருளாகும்.

அடுத்து, கடந்த முறை படித்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.

WO CHU QU YI HUI ER, HAO MA?

HAO!

இந்த உரையாடலின் பொருள் வருமாறு—

WO CHU QU YI HUI ER, HAO MA?

நான் சற்று வெளியே போக வேண்டும், பரவாயில்லையா?

HAO!

சரி, பரவாயில்லை.

இந்த உரையாடலில் "CHU QU"என்றால் வெளியே போவது என்பது பொருள். YI HUI ER என்றால் சற்று நேரம் என்பது பொருள்.

இப்பொழுது ஒரு புதிய உரையாடலைப் பார்ப்போம்.

இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற பாடநூலின் 23ஆம் பக்கத்தின் கடைசியிலும் 24ஆம் பக்கத்தின் மேல் பகுதியிலும் உள்ளது.

WO WAN DAO YI HUI ER, XING MA?

BU XING!

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தைத் தருகின்றோம்.

WO WAN DAO YI HUI ER, XING MA?

நான் சற்று தாமதமாக வந்தால், பரவாயில்லையா?

BU XING!

இல்லை, கூடாது.

இந்த உரையாடலில் "WAN"என்றால் தாமதம் என்பது பொருள், "DAO"என்றால் அடைவது என்பது பொருள். "XING MA?"என்றால் எதிர் தரப்பிடம் அனுமதி கேட்பது, முடியுமா என்பது பொருள். இங்கு "MA"என்றால் ஒரு வினா குறியாகும். பொதுவாக வாக்கியத்தின் கடைசியில் வரும். "BU XING" என்றால், இல்லை, முடியாது, கூடாது என்பது பொருள், அனுமதி வழங்காமல் இருக்கும் போது, இப்படி சொல்லலாம்.

இன்று நாம் இன்னொரு உரையாடலை படித்துள்ளோம். கடந்த முறை படித்த உரையாடலை சேர்த்து, பாடத்துக்குப் பின் பயிற்சி செய்யுங்கள். ஒரு நாள், நீங்கள் வெளியே போய் உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் இருந்தால், நீங்கள் தொலைப்பேசி மூலம் அப்பா அல்லது அம்மாவிடம் கேட்கலாம். WO JIN TIAN WAN YI HUI ER HUI JIA, XING MA?நான் இன்று தாமதமாக வீடு திரும்ப வேண்டும், பரவாயில்லையா? சரி, இன்றைய பாடத்தை இத்துடன் முடித்துக் கொள்கின்றோம். அடுத்த முறை சந்திப்போம்.