 அமெரிக்கா அருகே உள்ள எல்சல்வேடார் நாட்டில் உள்ள ஒரு கிளி, கொள்ளைக்காரர்களைப் பிடிக்க உதவியது.
சன்சல்வேடார் என்ற இடத்தில் ஒரு வீட்டில் புகுந்த கொள்ளைகாரர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்த பிறகு அங்கு இருந்த கிளியையும் கூண்டோடு திருடிக் கொண்டு ஒரு காரில் தப்பித்தனர்.
அவர்கள் சென்ற வழக்கமான சோதனைக்காக போலீசார் மறித்தனர்.
அப்போது காரில் இருந்த கிறி கொள்ளை கொள்ளை என்று கீச்சிட்டது. இதனால் சந்தேகம் கொண்ட போலீசார் காரை முழுவதுமாக சோதனை போட்டனர். அப்போது விலை மதிக்க முடியாத பொருட்கள் காரில் இருந்தன. இதைத் தொடர்ந்து கொள்ளைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளைக்காரர்கள் வீட்டுக்குள் புகுந்ததும் கிளியின் எஜமானி கொள்ளை கொள்ளை என்று சொன்னதை கிளி திரும்பக் கூறியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு கிளி ஒரே நாளில் பிரமலமாகி விட்டது.
தவறான வானிலை அறிவிப்பு செய்தவர்கள் மீது வழக்கு
ருமேனியாவில் காஸ்டினெஸ்டி சுற்றுலா நகரில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் வானிலை அறிக்கை தரும் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர இருக்கின்றார்கள்.
அவர்கள் மழை வரும் என்று வானிலை அறிவிப்பு கொடுக்கின்றார்கள். ஆனால், அன்று வெயில் அடிக்கின்றது. இப்படி அடிக்கடி தவறான அறிக்கை கொடுப்பதால், எங்களது தொழில் பாதிக்கப்படுகின்றது. மழை பெய்யும் என்று இவர்கள் வெளியிடும் அறிவிப்பை நம்பி சுற்றுலா பயணிகள் வருவது குறைந்து போய்விடுகின்றது என்று ஓட்டல் உரிமையாளர்கள் புலம்புகின்றார்கள்.
சரியாக கண்கா்காமல் தவறாக அறிக்கை கொடுத்த அதிகாரி அயோன் பொயானா வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்ப்டடார்.
பறவைகள் அழியும் ஆபத்து
உலகில் உள்ள மொத்த பறவைகளில் ஐந்தில் ஒரு பகுதி அழியும் அபாயத்தில் இருப்பதாக போர்டு லைப் இன்டர் நேஷனல் என்ற அமைப்பு கூறியுள்ளது.
உலகில் மொத்தம் ஒன்பதாயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் மூவாயிரத்து இருநூற்று பன்னிரண்டு பறவை இனங்கள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன. நூற்று எழுபத்தொன்பது பறவை இனங்கள் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கின்றன. பறவைகள் வசிக்கும் காடுகளை மனிதன் அழித்து வருவதால் பறவை இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.
|