• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-14 09:14:47    
நேயர் நேரம்

cri
வி------வணக்கம் நேயர்களே. நேயர் நேரத்தில் உங்களை மீண்டும் சந்திப்பது மனதுக்கு மகிழ்ச்சி.ராஜா ரா-------நேயர்களே வணக்கம். சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 17வது மாநாட்டில் கலந்து கொள்ள மும்முரமாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் உங்கனோடு கொஞ்சம் உங்கள் கடிதங்களைப் பற்றிப் பேசலாமா முதலில் கே இந்திராணி திருவண்னாமலை மாவட்டம், கொருக்காந்தூர் எம் ஜி ஆர் நகரில் இருந்து அப்புறம் அதே ஊரில் இருந்து பி கன்னியப்பன் கே கே ஞானமுருகன் இவர்கள் மூவருமே புதிய நேயர்கள் செப்டம்பர் திங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் கூறிய குறிப்புக்களை கேசட்டில் பதிவுச் செய்து, அதன்படி சமைத்துச் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர். செப் 30 உங்கள் குரல் நிகழ்ச்சியில் பெண்ணகரம் ஆ, முத்துக் கிருஷ்ணன் சீனாவின் புராணக்கதைகள் ஒலிபரப்பாக வேண்டும் என்று கூறிய கருத்தை கன்னியப்பன் வர வேற்றுள்ளார். வி------நேயரின் விருப்பத்தை கூடியவரை நிறைவு செய்வோம் ரா------ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் நேயர் என் பசுபதி வெங்கடேஸ்வரன், இ ஜெயந்தி, ஷாலினி, டி வசந்தகுமார், ஆகியோர் தங்கள் ஊரில் விரைவில் கிறை மன்றம் துவங்கப் போவதாகவும், அதற்கு பொருத்தமான சீனப் பெயர் சொல்லுங்கள் என்றும் கேட்கிறார்கள். ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளனர். வி-------நேயர்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறோம். வருகிற 18ம் நாள் சேலம் மாவ்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற உள்ள 17வது நேயர் மன்றக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள். பாராட்டுக்கு நன்றி. ரா------நாமக்கள் மாவட்டம் பேளுக்குறிச்சியில் இருந்து எம் சத்யா எழுதுகிறார். சீனாவில் பல்வேறு துறைகளில் பெண்கள் அடையும் முன்னேற்றத்தை சீன மகளிர் நிகழ்ச்சி மூலம் அறிய முடிவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜூலைத் திங்களில் நட்புப்பாலத்தில் சென்னையைச் சேர்ந்த கணக்குத் தணிக்கையாளர் ரகுபதியின் பேட்டியை பாராட்டியுள்ளார். பேளுக்குறிச்சி எம் அமுதா, ஆர் அருளரசி ஆகியோரும் சீன மகளிர் நிகழ்ச்சியை பாராட்டியுள்ளனர். மதுரை ஜராவத நல்லூர் எஸ் பாண்டியராஜன், மேத் திங்களில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதிய கடிதம் குறிப்பாக உங்கல் குரல் நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு பற்றி ஆரணி ஆசிரியர் பி கந்தசாமி பேசியதும் மார்ச்சிய சிந்தனைகளை வளர்த்த சன்யாட் சென் பற்றி ஆசிரியை ராஜ குமாரி பேசியதும் பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளன என்று பாராட்டியுள்ளார். மேலும் சீ வா நி sms net போட்டியில் தமக்கு இரண்டாவது பரிசு விடைத்ததை பெருமையுடன் கூறுகிறார். வி-----நேயரின் பெருமையில் நாங்களும் பங்கு கொள்கிறோம் தொழில் நட்ப வளர்ச்சி நம்மை நெருக்கமடையச் செய்யட்டும்