புஃ சியேனான் என்னும் 30 வயது கிராமத்துப் பெண், இவ்வாண்டில் உயர்ந்த மதிப்பு எண்ணுடன், சிசுவான் மாநிலத்தின் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.
புஃ சியேனானின் குடும்பம், சிசுவான் மாநிலத்து சின் ச்சின் மாவட்டத்தில் இருக்கிறது. வறுமையினால், புஃ சியேனான், சில ஆண்டுகள் தாமதமாகவே துவக்கப்பள்ளிக்குச் சென்று படித்தார். ஆனாலும், தனது திறமையினால், எப்பொழுதும் முன்வரிசையில் நிற்கிறார். இடைநிலைப்பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்ட பின், அவர் இயந்திர ஆலையில் வேலை செய்தார். திங்களுக்கு 200 யுவான் ஊதியத்தைப் பெற்றதால், அவரின் பெற்றோர் மனநிறைவு அடைந்தனர். ஆனால், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, தமது வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் புஃ சியேனானின் மனத்தில் உறுதியாகப் பதிந்து விட்டது.
இதனால், ஓய்வு நேரத்தில் அவர் சிசுவான் மாநிலத்தின் திறந்த வெளி பல்கலைக்கழகத்தின் கணக்கு பிரிவின் தேர்வில் கலந்துகொண்டார். 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. இயந்திர ஆலையின் கடினமான பணிகளில் ஈடுபட்ட போதிலும், ஓய்வு நேரத்தில் கல்விகற்கும் மகிழ்ச்சியால், புஃ சியேனான் தமது எதிர்காலம் பற்றி தன்னம்பிக்கையோடு உள்ளார். படிப்பின் மூலம் தமது வாழ்க்கையை மாற்றும் பாதையில் அவர் எப்படி செல்கின்றார்?
அவருடைய பெற்றோரின் விருப்பத்தின் படி செயல்பட்டிருந்தால், இயந்திர ஆலையில் 5 ஆண்டுகள் பணி புரிந்த அவர், திருமணம் செய்து குழந்தைப் பெற்று, அமைதியாக வாழ்வார். 2002ம் ஆண்டில் கோடைகால விடுமுறையில் அவர் இடைநிலைப்பள்ளியின் சகமாணவர்களை சந்தித்தார். இந்த தலைசிறந்த சகமாணர்களில் பெரும்பாலோர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தனர். நுண் உணர்வு மிக்க புஃ சியேனான், அவர்களுக்கும் தனக்கும் இடையே இருந்த இடைவெளியை உணர்ந்தார்.
மேலும், சுயபடிப்பு மூல தேர்வில், அவருக்கு பல இன்னல்கள் ஏற்பட்டன. ஆசிரியாரின் அதிகாரப்பூர்வ வழிக்காட்டுதல் இல்லாமல், அவர் கடினமாக கற்க வேண்டியிருந்தது. பள்ளிக்குத் திரும்பி, தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
இதற்கு, பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புஃ சியேனான் அமைதியான குடும்ப வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர். அப்பொழுது, தமது இடைநிலைப்பள்ளியின் ஆசிரியர் புஃ சுரொன்னை புஃ சியேனான் சென்று பார்த்தார். ஆசிரியர் புஃ கூறியதாவது:
இப்போதைய கொள்கைப்படி, மக்கள் 60 வயதில் கூட, பல்கலைக்கழகத்தின் தேர்வில் கலந்துகொள்ளலாம். அறிவை வளர்ப்பது, தனக்கும் நாட்டுக்கும் நலன் தருக்கிறது. இது ஒரு நல்ல தெரிவு. அவருக்கு ஆதரவு அளிக்கின்றேன் என்றார் அவர்.
|