படைப்புத் தொழிலை வளர்ப்பது
cri
வளரும் நாடுகளில் படைப்புத் தொழிலை வளர்த்து, கலைப் படைப்பாற்றலை முழுமையாகப் பயன்படுத்தி, அதை சந்தைப்படுத்த ஐ.நா. பாடுபடும் என்று ஐ.நா. துணை தலைமைச் செயலாளர் Anwarul Chowdhury கூறியுள்ளார். நேற்று ஷாங்காய் மாநகரில், "ஐ.நா.வின் உலக படைப்புத் தொழில் கருத்தரங்கில்" அவர் பேசினார். கலை படைப்புத் தொழில் பற்றிய வளரும் நாடுகளின் விழிப்புணர்வை அதிகரித்து, ஆப்பிரிக்காவை தளமாகக் கொண்டு கலைப்படைப்பு இணையத்தை உருவாக்கும் நோக்குடன் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. தவிர, படைப்புத் தொழிலின் வர்த்தகம், முதலீடு, அறிவு சார் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆய்வையும் தொடர்பையும் வலுப்படுத்தும் பொருட்டு, சர்வதேச படைப்புத் தொழில் தொடர்பு மையத்தை ஐ.நா. நிறுவும்.
|
|