• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-16 11:46:12    
தை இனம்

cri

கோடைகாலத்தில் தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில், பூச்செடிகள் ஓங்கி வளர்கின்றன. இங்கு வசித்து வரும் தை இனத்தவர், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் விழாவான நீர் தெளிப்பு விழாவை அப்போது கொண்டாடுவர். விழா நாட்களில், இவ்வினத்தின் ஆண் பெண் அனைவரும், ஒருவர் மீது ஒருவர் நீரைத் தெளிப்பர். நீர் ஒலி, பாட்டொலி, சிரிப்பொலி ஆகியவை காதில் வந்து விழும். அப்போது, தை இன கிராமத்தில் ஒரே பரப்பரப்பு. அழகான தை இன மங்கையரின் ஆடையே இப்போது அறிமுகம் செய்கின்றோம்.

தை இன மக்கள், மயில் மீது சிறப்பு பிரியம் கொண்டுள்ளனர். இது தொடர்பான கதை இதோ:துணிவுமிக்க, அமைதியே உருவான இளவரசன் மீது மங்கையர் பலர் காதல் கொண்டனர். அவனை மணம் செய்ய விரும்பினர். ஒரு நாள், வேட்டையர் ஒருவர் இளவரசனிடம் வருமாறு தெரிவித்தார்: அடுத்த நாள், அழகான மயிலான ஏழு மங்கையர் ஏரியில் நீச்சலடிப்பர். அவர்களில் மிக இளையவள், மற்றவர்களை விட அழகானவள். நீச்சலடித்த போது, ஏரி ஓரத்தில் கழற்றி வைத்திருந்த அவளது மயில் ஆடையை எடுத்து ஒளித்து விடுபவனை இம்மங்கையர் மணம் செய்வர். இக்கதையைக் கேட்டு, இளவரசன் ஆச்சரியம் அடைந்தான். அடுத்த நாள் அவன் ஏரி கரைக்கு வந்து, அழகான மங்கையர் எழுவரைக் கண்டார். அவர்களில் அழகுமிக்கவரை அவர் காதலிக்கலானார். ஆதலால், அவளுடைய மயில் ஆடையை ஒளித்து மறைத்து விட்டார். மங்கையர் நீராடிய பின், ஆடையணிந்து மயிலாகிப் பறந்து விட்டனர். மிக இளையவள் மட்டும், தனது ஆடையைக் கண்டறியாமல், தடுவறினான். அப்போது, இளவரசன், அவளது மயில் ஆடையைக்கொண்டு போய், கொடுத்தான். பின்னர், அவளும் இளவரசனும் மணம் செய்து, இன்பமாக வாழ்ந்தனர்.

இக்கதை, தலைமுறை தலைமுறையாக, தை இனப் பிரதேசத்தில் பரவி வருகின்றது. இன்றும், தை இன மங்கையரின் உடைகளில், மயில் அலங்கரிக்கப்படுகின்றது. "நீர் தை" இன மங்கையரின் ஆடைகளும் அலங்காரமும் குறிப்பிடத்தக்கவை.