• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-20 09:36:25    
உலக கோப்பை கால்பந்து போட்டி

cri

2006ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து சாம்பியன் போட்டிக்கான குலுக்கு சீட்டு மூல குழுப் பிரிப்பு நிகழ்ச்சி, அண்மையில் ஜெர்மனியின் லேபிசி நகரில் நடைபெற்றது. சீன அணி தேர்வுப் போட்டியில் பெற்றி பெறவில்லை என்ற போதிலும், இந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு சீன ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

குலுக்கு சீட்டு மூலக் குழுப் பிரிப்பு நிகழ்ச்சி, டிசம்பர் 10ஆம் நாள் அதிகாலையில் நடைபெற்றது. அப்போது, லட்சக்கணக்கான சீனக் கால்பந்து ரசிகர்கள் இரவோடு இந்த நிகழ்ச்சியை தொலைகாட்சி மூலம் பார்த்தனர். மேசை பந்து துறையில் சீன ஒரு வல்லரசு. ஆனால், சீன விளையாட்டு ரசிகர்கள் கால்பந்து போட்டியில் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் மேசை பந்தைவிட பெரிதும் தாண்டியுள்ளன.

தற்பொது, சீனாவின் சுமார் எல்லா பெரிய நகரங்களிலும் வாரத்தின் முடிவில் ஐரோப்பிய கால்பந்து போட்டிகளை ரசிக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பைக்கான கால்பந்து போட்டியும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியும் சீன ரசிகர்களின் விழாகளாக மாறியுள்ளன.

பிரேசில், இத்தாலி, ஆர்ஜேன்டினா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய அணிகளுக்கு பல சீன ஆதரவாளர்கள் உள்ளனர். எனவே, ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொள்ள சீனாவுக்கு தகுதி பெறவில்லை என்ற போதிலும், இந்த அணிகளின் தலைவிதியில் சீன ரசிகர் மிக கவனம் தெலுத்துகின்றனர்.

குலுக்குச் சீட்டு மூலக் குழுப் பிரிப்பு நிகழ்ச்சியின் முடிவு வெளிவந்ததும், பல சீன ரசிகர்கள் இணையம் மூலம் தமது மகிழ்ச்சியை அல்லது கவலையை தெரிவிக்கின்றனர். இங்கிலாந்து அணியை விரும்பும் சீன ரசிகர்கள் நடத்தும் "நிலையான இங்கிலாந்து" என்ற கருத்தரங்கில் ஒரே மகிச்சியான சூழ்நிலை நிறைந்திருந்தது.

சீன கால்பந்து ரசிகர்கள் ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகப் கோப்பை கால்பந்து போட்டியில் இவ்வளவு அதிக ஆர்வம் காட்டுவதால், சீன விளையாட்டு செய்தி ஊடகங்களும் இந்த போட்டி பற்றிய செய்திகளை அறிவிக்கும் பணியையும் வலுப்படுத்த வேண்டும். சீன மத்திய தொலைகாட்சி நிலையம் இந்த போட்டியின் அனைத்து 64 ஆட்டங்களையும் நேரடியாக ஒளிப்பரப்புவதென திட்டமிட்டுள்ளது. அது மொத்தம் 450 மணிநேரம் ஒளிப்பரப்பும். இந்த போட்டி பற்றிய செய்திகளைச் சேகரிக்க சீனா 300க்கும் அதிகமான செய்தியாளர்களை அனுப்பும் என்றும் குறிப்பிடத்தக்கது.