சீனாவின் காப்பீட்டுக் கட்டண வருமானம்
cri
இவ்வாண்டின் முதல் 10 திங்களில், சீனாவின் காப்பீட்டுத் துறையின் மொத்த காப்பீட்டுக் கட்டணம், 41 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு முழுவதிலும் இருந்த நிலையை இது நெருங்கியுள்ளது. இன்று Guang Zhou நகரில் நடைபெற்ற காப்பீடு பற்றிய கருத்தரங்கில் சீனக் காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் Dai Feng Ju இதை தெரிவித்தார். இவ்வாண்டு, சீனக் காப்பீட்டுத் துறை, வெளிநாட்டுக்கு திறந்து வைக்கப்படும் முதலாவது ஆண்டாகும். தற்போது, சீனாவில் 70க்கு அதிகமான காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அன்னிய முதலீட்டு காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 40ஐத் தாண்டியுள்ளது.
|
|