சீனப் பொருளாதார மற்றும் சமூகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளில், வெள்ளப்பெருக்கு, நீர் மாசுப்படுதல், நீர் மற்றும் மண் அரிப்பு முதலிய பிரச்சினைகள் நீக்கப்பாடுபடும். வெள்ளப்பெருக்கு தடுப்பு, நீர் விநியோகம், உயிரின வாழ்க்கைச்சூழல் முதலியவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற நீர் சேகரிப்பு பணிக்கூட்டத்தில் பேசிய சீன நீர் சேகரிப்பு அமைச்சர் Wang Shu Cheng இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளில், நீர் சேகரிப்பு அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கென, சீனா மொத்தம் 36 ஆயிரம் கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. அதே வேளையில், 6 கோடியே 70 லட்சம் கிராமப்புற வாசிகளின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டு விட்டது என்று புள்ளிவிவரம் காட்டுகின்றது.
|