உலக கூரையாக அழைக்கப்பட்ட திபெத் பீடபூமி சீனாவில் தனிச்சிறப்புடைய பிரதேசமாகும். ஆகவே, சுற்று பயணம் மேற்கொள்ள அல்லது அறிவியல் பயணம் மேற்கொள்ள இங்கே வருவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் நிலபரப்பு 12 இலட்சத்துக்கும் அதிகமான சதுர கிலோமீட்டராகும். பல பத்து மலைகள் கடல் மட்டத்திலிருந்து 7000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன. திபெத்தின் அற்புத நிலவியல் மூலவளம் மேன்மேலும் அதிகமான பயணிகளையும், அறிவியல் அறிஞர்களையும், கலைஞர்களையும் ஈர்க்கின்றது. இவ்வாண்டின் முதல் 10 திங்களில், மொத்தம் 17 இலட்சம் அந்நிய மற்றும் உட்நாட்டுப் பயணிகள் திபெத்திற்கு வருகை தந்தனர். சுற்றுலா வருமானம் 180 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. திபெத்தில் சுற்று பயணம் செய்வது, அந்நிய மற்றும் உள்நாட்டு பயணிகளின் தலையாய தேர்வாக மாறியுள்ளது.
|