இவ்வாண்டு சீன நாட்டில் சந்தை அமைதியாக வளர்ந்து, தேவை இடைவிடாமல் விரிவாகியுள்ளது. சீனாவின் தேவை, சர்வதேச சந்தையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று சீன துணை வணிக அமைச்சர் Yu Guang Zhou கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் பேசிய அவர், இவ்வாண்டு சீன சந்தையின் தேவை, 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்படுவதாகவும், விரைவாக வளர்ந்து வரும் உள் நாட்டு சந்தை, மென்மேலும் அதிக அன்னிய வணிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் கூறினார். தற்போது, 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அன்னிய பொருட்களை சீனா ஆண்டுக்கு இறக்குமதி செய்கின்றது. அடுத்த சில ஆண்டுகளில், சர்வதேச சந்தைக்கு ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பு பொருட்களை சீனா ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Yu Guang Zhou தெரிவித்தார். எதிர்காலத்தில், ஏற்றமதி இறக்குமதி கட்டமைப்பை சீனா மேலும் மேம்படுத்தி, இறக்குமதிக்கான ஆதரவை வலுப்படுத்தி, உணவுப் பொருட்கள், பருத்தி மற்றும் மூலவள பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கும் என்று Yu Guang Zhou கூறினார்.
|