• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-19 20:49:04    
பார்வையில் தெரியும் பண்பாடு

cri
கண்ணால் காண்பதே மெய் என்கிறது கன்பூசியஸ் தத்துவம். கண்கள் கலாச்சாரத்தை-பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன என்கிறது அறிவியல் பார்வை. எப்படி? இந்த உலகை ஆசியர்களும், ஐரோப்பியர்களும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றனர் என்பதை அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன.

ஐரோப்பியப் பின்னணி உடைய வட அமெரிக்க மாணவர்களிடமும், சீனாவைச் சேர்ந்த மாணவர்களிடமும் ஒரு நிழற்படத்தை அமெரிக்காவின் மிச்சிகன் பல்களைக்கழக ஆய்வாளர்கள் காட்டினார்கள். அந்த நிழற்படத்தில் வெளிப்படையாகத் தெரிந்த பொருளை வட அமெரிக்க மாணவர்கள் அடையாளம் கண்டு பட்டெனப் பதில் சொன்னார்கள். ஆனால் சீன மாணவர்களோ, அதிக நேரம் எடுத்துக்கொண்டு, படத்தை உற்று நோக்கி, அந்தப் படத்தில் உள்ள முழுக்காட்சியையும் புரிந்து கொண்டு, பின்னணியையும் விளக்கினார்கள்.

25 வட அமெரிக்க மாணவர்களிடமும், 27 சீன மாணவர்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் படத்தைப் பார்த்த போது அவர்களுடைய கண்விழிகள் எவ்வாறு நகர்ந்தன என்பதை ஆய்வாளர்கள் ஹன்னா பயே சுவா மற்றும் ரிச்சர்டு நிஸ்பெட் கண்காணித்தனர். அந்தப் படத்தில் எந்த இடத்தை மாணவர்கள் பார்க்கின்றனர். எவ்வளவு நேரத்திற்குப் பார்க்கின்றனர் என்பதும் கணக்கிடப்பட்டது. இந்த மாணவர்கள் உலகை வித்தியாசமாகப் பார்க்கின்றனர்; இதற்குக் காரணம் கலாச்சார வித்தியாசமே என்று கூறுகிறார் நிஸ்பெட்.

இந்தப் பண்பாட்டு வேறுபாட்டுக்கு என்ன அடிப்படை? ஐரோப்பியர்களை விட ஆசியர்கள் சிக்கலான ஒரு சமுதாய அமைப்பில் வசிக்கின்றனர். ஆசியர்கள், ஐரோப்பியர்களை விட மற்றவர்களிடம் அதிக அக்கறை காட்ட வேண்டியுள்ளது என்று கூறிய அமெரிக்க ஆய்வாளர் நிஸ்பெட், ஐரோப்பியர்கள் தனிமனிதர்கள். தடாலடியாக எதையும் செய்யமுடியும். ஆனால் ஆசிய நாட்டவர்கள் அப்படியல்ல. அவர்கள் எதையும் தீர்க்கமாகச் சிந்தித்தே செயல்படுவார்கள் என்கிறார்.

சீனப் பண்பாட்டின் மையமே மனித நேயம். மேற்கத்திய நாடுகளிலோ மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக கவலைப்படாமல் காரியம் செய்யும் வழியைக் காண்பதிலேயே குறியாக இருக்கிறோம். இதற்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதாரமும் இயற்கைச் சூழலுமே காரணம் என்று கூறுகிறார் நிஸ்பெட்.

பண்டைய சீனாவில் விவசாயிகள் நீர்வளத்தைப் பகிர்ந்து விவசாயம் செய்து, உணவான அரிசியை விளைவித்தார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளின் போக்கோ மாறுபட்டது. மனிதர்கள் தனித்தனியாகப் பண்ணைகளை வைத்து, திராட்சை, ஆலிவ் போன்ற பணப்பயிர்களை வளர்த்து வியாபாரிகளைப் போல செயல்பட்டனர்.

ஆகவே, இந்த ஆசிய-ஐரோப்பிய வேறுபாடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. உதாரணமாக, அரிஸ்டாட்டில் தனது கோட்பாட்டில் பொருளில் கவனம் செலுத்தினார். ஒரு கல்லில் ஈர்ப்புவிசை இருப்பதால் அது நீரில் மூழ்குகிறது; ஒரு மரக்கட்டையில் ஈர்ப்புவிசை இல்லாததால் அது மிதக்கிறது என்று கூறிய அரிஸ்டாட்டில், தண்ணீரைப் பற்றி பேசவில்லை. ஆனால், சீனர்களோ ஒரு பொருளுடன் தொடர்புடைய எல்லா நடவடிக்கைகளையும் கவனிக்கின்றனர். அதனால் தான், அலைகளுக்கும் காந்தத்திற்கும் உள்ள தொடர்பை மேலை உலகினர் கண்டறிவதற்கு வெகு காலத்திற்கு முன்பே சீனர்கள் கண்டுபிடித்தனர்.