• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-22 08:51:20    
சாம்பியன் பட்டம் பெற்ற காதலனும் காதலியும்

cri

எட்டு ஆண்டுகள் நிறுத்தப்பட்டு இவ்வாண்டு மீண்டும் நடைபெற்ற உலகப் கோப்பைக்கான பூப்பந்து போட்டியில் சீன வீரர் லின் டான் சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனும் உலக சாம்பியனுமான இந்தோநேசிய வீரர் தொப்பிக் கலந்துகொள்ளவில்லை என்ற போதிலும், இதுவும் ஒரு உலக நிலை போட்டியின் சாம்பியனாகும். எனவே, நீண்டகாலமாக உலக வரிசையில் முதலிடம் வகித்துவரும் லின் டான் உலக சாம்பியன் பட்டம் பெறுவது இல்லை என்ற நிலை முடிவுக்கு வந்தது.

உலக சாம்பியன் பட்டப் போட்டிக்குப் பிந்திய சில திங்களில் தாழ்ந்த நிலையில் இருந்துவரும் சீன வீராங்கனை சியே சிங் பாங்வும் இந்த முறை சீன வீராங்கனை சாங் நிங்கை மீண்டும் தோற்கடித்து மகளிர் பிரிவு சாம்பியன் பட்டம் பெற்றார். இவ்வாறு இந்த போட்டியில் காதலன் லின் டான் காதலி சியே சிங் பாங் இருவரும் உலக சாம்பியன் பட்டம் பெற்றனர் குறிப்பிடத்தக்கது.  அவர்கள் ஒரே போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவது இது ஐந்தாவது முறையாகும்.

இந்த போட்டியில் சீன அணி அனைத்து நிகழ்ச்சிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. ஆனால், இந்த போட்டியில் சில உலக புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொள்ளவில்லை. எனவே, வளர்ச்சி நோக்குடன் பார்த்தார், சீன அணி எந்தவித நம்பிக்கை ஆர்வம் கொள்ளமுடியாது. சாங் நிங், சென் ஹொங் படிப்படியாக வயது அதிகரித்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்யில் அவர்கள் கலந்துகொண்டாலும் முக்கிய கடமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

பௌ ச்சுன் லை, சோமி ஆகிய இருவரும் சரியான வயதில் இருக்கின்றனர். ஆனால், அவர்களின் விளையாட்டு நுட்பத் திறன் மெதுவாக தான் வளர்கின்றது. சென் ஜின், லு லான் ஆகிய இருவர் வளர்ந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் எப்படி இன்னும் நிச்சயமாக சொல்ல முடியாது. போட்டியாற்றலை பார்த்தால், காதலன் காதலியான லின் டான், சியே சிங் பாங் இருவருக்கு மட்டும் நல்ல எதிர்காலம் உண்டு.

சீன விளையாட்டு வீரர்கள் உலக கோப்பை போட்டியில் கலந்துகொள்ளும் போது, வெளிநாடுகளின் பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களை சரிப்படுத்துகின்றனர். 2006ஆம் ஆண்டு போட்டி பருவத்தை வரவேற்கும் வகையில், இந்த போட்டியின் வெற்றியை ஒரு துவக்கப் புள்ளியாகக் கொண்டு இருவரும் போட்டியுடன் முன்னேற்றமடைந்து சாதனை நிகழ்த்த வாழ்த்துகின்றோம்.