• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-20 17:20:20    
நோய் தடுப்பு ஊசி

cri
1796ம் ஆண்டில் பிரிட்டிஷ் மருத்துவர் ஒருவர் அம்மைப்பாலை மனிதரின் உடம்பில் போட்டால் பெரியம்மை நோயை தடுக்க முடியும் என்று கண்டுபிடித்தார். இதை ஆராய்ந்து அப்போது முதன்முதலாக பெரியம்மை தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டது.
ராஜா....ஆமாம். நான் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். 1980ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு பெரியம்மை நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக அறிவித்தது. மனித குலம் நோய் தடுப்பு வழிமுறையைக் கொண்டு அழித்த முதலாவது நோய், பெரியம்மை நோயாகும். அப்படித்தானே.
கலை......சரிதான். மருத்துவ அறிஞர்களின் முயற்சி மூலம், கடந்த 50 ஆண்டுகளில் மனிதரை தொற்றிய நோய்களில் பெரும்பாலான நோய்களைத் தடுக்கும் ஊசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பற்றி நீங்கள் எடுத்துக் கூறலாமா?
ராஜா....கண்டிப்பாக. இந்த நோய் தடுப்பு ஊசிகளில் முக்கியமாக அம்மை, காலரா, கொல்ள்ளை நோய், காச நோய், hepatitis B நோய், கக்குவான் இருமல், டிப்தீரியா நோய், tetanus நோய், இளம் பிள்ளை வாதம், தட்டம்மை போன்ற நோய்களை தடுக்கும் ஊசி மருந்துகள் கண்டுபித்து தயாரிக்கப்பட்டுள்ளன.
கலை.....நீங்கள் கூறுவதை கேட்கும் போது உங்களுக்கு நோய் தடுப்புத் துறையில் அனுபவம் அதிகம் போல் தெரிகின்றது. உங்களிடமிருந்து அதிகமான மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்கின்றேன்.
ராஜா.....நன்றி. நோய் தடுப்பூசி மருந்து தொற்றுநோய் தடுப்பில் மாபெரும் பங்கு எடுத்துள்ளதால் பல்வேறு நாடுகள் இந்த ஊசி போடுவதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளன. மேலை நாடுகளை காட்டிலும் சீனா இத்துறையில தாமதமாக ஆராய்ச்சி வேலை துவங்கியது ஆனாலும் சீனா தனது சமூக பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இந்த பணியை சேர்த்துள்ளது. இவற்றில் குழந்தைகளின் உடல் நலத் திட்டத்தின் அடிப்படையில் நோய் தடுப்பூசி மருந்து தயாரிக்க ப்படுகின்றது
1  2