வணக்கம் நேயர்களே தி. கலையரசியும் ராஜாராமும் உங்களுக்கு நோய் தடுப்பு ஊசி மருந்து பற்றி கூறுகின்றோம். ராஜா....நோய் தடுப்பு ஊசி மருந்து பயன்படுத்துவது தொற்று நோய் தடுப்பிலும் நோய் புரவாமல் கட்டுப்படுத்துவதிலும் மிக பயனுள்ள வழிமுறையாகும் கலையரசி இது பற்றிய தங்கள். கருத்து என்ன? கலை.....நீங்கள் சொல்வது சரிதான். பல தகவல்கள் தங்கள் கருத்தை உறுதிப்படுத்துகின்றன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தற்போது உலகத்தில் ஆண்டு தோறும் தொற்று நோய் காரணமாக மரணமடையும் குழந்தைகளில் சுமார் 20 லட்சம் குழந்தைகளை நோய் தடுப்பு ஊசி போட்டிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ராஜா..... நோய் தடுப்பு ஊசி என்றால் என்ன? நேயர்களுக்கு கொஞ்சம் விளக்கம் கூறலாமே.
கலை....மிகிழ்ச்சி. நான் சொல்வதற்கு முன் பெய்சிங் மாநகரின் நோய் தடுப்பு மையத்தில் பணி புரிகின்ற நிபுணர் ஊ சியானின் கருத்தை கேளுங்கள். ராஜா......பொதுவாக கூறினால் நோய் தடுப்பு ஊசி மருந்து குறிப்பிட்ட தொற்றுநோயின் கிருமி அல்லது கிருமியைக் கொண்டு தயாரித்த உயிரிக் கொல்லி மருந்து ஆகும். இதை ஊசி மூலம் மனிதரின் உடம்பில் செலுத்த வேண்டும். இந்த மருந்து மனிதரின் உடலில் செலுத்தப்பட்ட பின் மருந்தில் உள்ள உயரிரி கொல்லி அந்த மனிதரின் உடம்பிற்குள் உள்ள தொற்று நோய்க் கிருமியை அழிக்கிறது. தொற்று நோயை அழிக்கும் கிருமி, நோய் தடுப்பு மருந்தாக பயன்படுகின்றது என்றார் அவர். கலை.....நாம் நோய் தடுப்பு ஊசி மருந்து பற்றி கூறும் போது மருத்துவ வரலாற்றை நினைவு கூறலாம். 1 2
|