 மனித முகம் சுருங்குகிறதா?இப்படி ஒரு கேள்வியை எழுப்பி, விடை காண முற்பட்டுள்ளனர் மானிடவியல் அறிஞர்கள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வசித்த நமது மூதாதையர்களுக்கு நம்மை விட பெரிய தலையும் முகமும் இருந்ததாம்.
இவ்வாறு முகமாற்றம் அல்லது முகச்சுருக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?
உணவுப் பழக்க வழக்கம் தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள். இப்போது நாம் நன்கு வெந்த, மிருதுவான உணவுவகைகளை உண்பதால் நமக்கு வலுவான தாடை எலும்புகளுக்கும், பற்களுக்கும் மண்டை ஓட்டுக்கும் தேவை இல்லாமல் போய்விட்டது. இவ்வாறு முகம் சுருங்குவதால் பல்முளைப்பதில் கோளாறு ஏற்பட்டு, தாறுமாறாகப் பற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொள்கின்றன. சிலருக்கோ தெத்துப்பற்களாக இருக்கின்றன இது பற்றி ஆராய்ந்த மிச்சிகள் பல்கலைக்கழக மானிட வியல் பேராசிரியர் சார்லஸ் லோரிங் பிரேஸ், நமக்குப் பற்கள் குறைவாக முளைக்கின்றன என்கிறார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனைவருக்குமே நானப்பல் முளைத்தது. இப்போதுள்ள மக்களில் பாதிப்பேருக்குத் தான், நானப்பற்க் முளைக்கின்றன. மேலும், நமது வெட்டும் கடைவாய்ப்பற்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன என்று பேராசிரியர் பிரேஸ் கண்டறிந்துள்ளார்.

உலகிலேயே மிகவும் பழமையான 9000 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் துருக்கியில் உள்ளது. இந்த நகரத்தில் கிடைத்த மண்டை ஓடுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில், நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்களின் மண்டை ஓடுகளை விட, நகரத்தில் குடியேறி வாழ்ந்தவர்களின் மண்டை ஓடுகள் சுருங்கி, சிறியவையாக இருப்பதை ஒஹாயோ அரசு பல்கலைக்கழகத்திந் மானிடவியல் பேராசிரியர் கிளார்க் ஸ்மென்சர் லார்ஸன் கண்டறிந்துள்ளார். அவர், விரைவில் நடைபெற உள்ள உலக உடல் நல வரலாறு பற்றிய மாநாட்டில் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறார். அதில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உயிர்வாழ்வதற்காக உணவு தேட கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதனால், அவனுடைய உடலமைப்பு மிகவும் பெரியதாக இருந்தது என்று கூறுகிறார்.
இன்றைய எகிப்தில் உள்ள NUBIA என்ற வட்டாரத்திலும், சூடானிலும் உள்ள மக்களின் முகத்தோற்றங்களை விரிவாக அளவிட்டு ஆராய்ந்த அமெரிக்காவின் அட்லான்ட்டாவிலுள்ள எமோரி பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் ஜார்க் ஆர்மெலகோஸ், இப்போதைய மக்களின் உச்சந்தலை உயரமாகவும் வட்டமாகவும் வளர்ந்து விட்டது என்கிறார்.
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் இத்தகைய தலைகீழ் மாற்றங்களுக்கு உணவுப்பழக்கம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது என்கின்றனர் சில அறிவியல் அறிஞர்கள். வரலாற்றுக்காலத்திற்கு முன்பு வசித்த மக்கள், தங்களது பாலுறவுக் கூட்டாளியாக சிறிய முகங்களை உடையவர்களை தேர்ந்தெடுத்ததே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
காரணம் எதுவாக இருந்தாலும், காலப்போக்கில் மனிதன் தனது முகத்தை இழந்து விடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு
|