வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்ட வினாவுக்கு விடையளிக்கின்றோம். சந்தேகம் வரும் போதெல்லாம் தாளாரமாக கேள்வி கேளுங்கள்.
ஐ.நாவில் பறவை காய்ச்சல் விவகாரத்துக்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அவருடைய கடமை என்ன என்று சில நேயர்கள் கேட்கின்றார்கள்.
சர்வதேச விவகாரங்களில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் வகையில் ஐ.நாவில் இணக்கக் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளை சமாளிக்கும் பொறுப்பை ஒருங்கிணைப்பாளர்கள் முக்கியமாக ஏற்கின்றனர். ஆய்வுகளை நடத்தி தொடர்புடைய தகவல்கள் அனைத்தையும் அவர்கள் சேகரிக்க வேண்டும். அத்துடன் பல்வேறு தரப்புகளை இணக்கத்துக்கு வரச் செய்ய இயன்றதனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். நீதி நியாயம் நல்லெண்ணம் ஆகியவற்றுடன் ஒத்துழைக்கும் கோட்பாட்டுக்கு இணங்க செயல்பட வேண்டும். ஆனால் அவர் செய்து வைக்கும் சமரசம் எந்தத்த தரப்பையும் கட்டுப்படுத்தக் கூடியதல்ல. மேலும் இது சர்ச்சையை தீரப்பதற்கான சட்ட வழிமுறையல்ல.
சமரசம் செய்யும் போது சர்ச்சையில் சிக்கியுள்ள தரப்புகள் இணக்க கமிட்டியை நிறுவும் படி எழுத்து மூலம் செயலகத்திடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட தரப்புக்கள் சர்ச்சையில் ஈடுபட்டிரிந்தால் பல்வேறு தரப்புக்கள் கலந்து பேசி இணக்க கமிட்டி உறுப்பினர்களை கூட்டாக நியமிக்க வேண்டும். பொதுவாக இந்த கமிட்டியில் 5 உறுப்பினர்கள் இருப்பார்கள். சர்ச்சையில் உள்ள ஒவ்வொரு தரப்பு இந்த 5 உறுப்பினர்களில் இருவரை தேர்வு செய்யலாம். அத்துடன் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கமிட்டித் தலைவரை தெரிவு செய்ய வேண்டும். புலன்விசாரணை செய்யும் போது ரகசியமாக பெற தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் கடமை அவர்களுக்கு உண்டு.
நிலைமையின் தேவைக்கு ஏற்ப பல நாடுகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், முரண்பாடுகள் ஆகியவற்றை சமாளிக்கும் போது ஐ.நாவின் ஒருங்கிணைப்பாளர்களின் பங்கு வெளிப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, பறவை காய்ச்சல் ஒருங்கிணைப்பாளர்கள், மத்திய கிழக்கு பிரச்சினைக்கான ஒருங்கிணைப்பாளர்கள், அவசரமான நிவாரணப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் முதலியோர் நிகழ்ச்சிகளைச் சமாளிப்பதில் செயல்படுகின்றார்கள். சர்வதேச முரண்பாடுகளை அமைதிபடுத்தி தீர்ப்பதற்காக அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
|