• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-21 17:24:54    
ஒரு ஆண்டில் 573 பவுண்டு எடை குறைந்த மனிதன்

cri
அமெரிக்காவில் மாமிசமலையாக வாழ்ந்தவர் பேட்ரிக்டியூயல். ஒரு ஆண்டுக்கு முன்பு அவரது எடை 1.072 பவுண்டு ஆகும். அதாவது ஈராயிரத்து ஐந்நூறு கிலோ ஆகும்.

ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக அவரை வெளியே கொண்டுவர முடியாமல் அவரது படுக்கை அறைச்சுவரை இடிக்க வேண்டி இருந்தது. ஏழு மாதங்களுக்குப் பிறகு அப்போது தான் முதல் முறையாக அவர்தன் படுக்கை அறையைவிட்டே வெளியே வந்தார். 43 வயதான அவரால் உட் காரமுடியவில்லை. புரண்டு படுக்க முடியவில்லை. இருதயக் கோளாறு, சர்க்கரை நோய் இருந்தது.

ஆஸ்பத்திரியில் சேர்த்து இருதய அறுவை சிகிச்சை செய்த 12 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் எடை பாதியாக குறைந்து உள்ளது.

சிரிப்பதற்காக கப்பல் பயணம்

சிரிப்பு மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது சிரிப்பு. சிரிப்பதற்கு கற்றுக் கொடுப்பதற்காக ஒரு கப்பல் பயணம் தொடங்கப்பட இருக்கின்றது。

இங்கிலாந்து நாட்டு கப்பல் கம்பெனி ஒன்று சிரிப்பு மூலம் யோகா, சிரிப்பு தியானம், சிரிப்பதற்காக சுவாசப்பயிற்சி என்று சிரிப்பு மூலம் சிகிச்சை அளிப்பதர்காக கப்பல் பயணத்தை தொடங்க இருக்கின்றது.

லாப் அலைவ் என்று பெயர் சூட்டப்பட்ட ஒறு ஆடம்பரக்கப்பல் இதற்காக ஏற்பாடு செய்து உள்ளது. இதில் பயணம் செய்யும் பயணிகள் எந்த நேரமும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

வெள்ளை நிற கார்களில் தான் அதிகமாக பறவைகள் எச்சமிடுகின்றன

வெள்ளை நிற கார்களைத்தான் எச்சமிட பறவைகள் அதிக அளவில் விரும்புகின்றன என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் சார்லஸ் வெஸ்ட். 37 வயதான இவர் பரிஸ்டல் பல்கலைக்கழகத்தில்பணியாற்றி வருகின்றார்.

40 ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து 2 ஆயிரம் கார்களில் பறவைகள் எச்சமிட்டு இருப்பதை வைத்து ஆராய்ச்சி செய்தார். இதன் முடிவில் பறவைகள் கறுப்பு மற்றும் நேவி புளு நிற கார்களில் அதிகம் எச்சமிடுவதில்லை என்றும் வெள்ளை நிற கார்களேயே எச்சமிட அதிகம் நாடுகளின்றன என்றும் தெரிய வந்து இருப்பதாக சார்லஸ் வெஸ்ட் கூறி இறுக்கின்றார்.