
உடல் பருமனான் போலீசார் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று ருமேனியா நாட்டில் புசாவ் நகரில் உத்தரவிடப்பட்டு உள்ளது. போலீசார் குண்டாக இருப்பதால் உடல் மெலிந்த திருபர்களை ஓடிப்பிடிக்க முடியாமல் தவிக்கின்றார்கள். இதனால் தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை ட்ரிம்மாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இப்படியும் ஒரு மனிதர் அர்ஜென்டினாவில் போனஸ் அயர்ஸ் நகரை சேர்ந்த ஒருவர் பழைய துணிக்கடையில் ஒரு சட்டையை வாங்கினார். வீட்டுக்குப் போய் பார்த்த போது அந்த சட்டையின் பைக்குள் ரூ. 1.5 இலட்சம் நோட்டுக்கள் இருப்பதை பார்த்தார். உடனே அவர் அந்த சட்டையை எடுத்துக்கொண்டு அதை வாங்கிய கடைக்குச் சென்றார். அவரும் கடைக்காரரும் பெரும் முயற்சி செய்தி அந்த சட்டையை விற்ற பெண்ணை கண்டுபிடித்தனர். அவரிடம் 1.5 லட்சத்தையும் ஒப்படைத்தனர். பணத்தைக் கண்டு அந்தப் பெண் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். பண தேவைக்காக தனது தாத்தாவினஅ சட்டையை விற்றதாகவும், இப்போது அதிர்ஷ்ட தேவதை கண்களை திறந்துவிட்டது என்றும் அந்தப் பெண் கூறி பணத்தை திரும்ப ஒப்படைத்தவரை பாராட்டினார்.
|