"தொழில் கட்டமைப்பை சீர்படுத்துவது தொடர்பான தற்காலிக விதியை" சீனா இன்று வெளியிட்டது. அன்னிய முதலீடுகளை பயன்படுத்தும் இடங்களில் தொழில் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று விதி வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்னிய முதலீட்டை ஈர்க்கும் ஆற்றல் மிக்க பகுதிகளும், வளர்ச்சி மண்டலங்களும், உற்பத்தி நிலையை உயர்த்தி, ஆராய்ச்சி, வளர்ச்சி, நவீன பொருள் புழக்கம் உள்ளிட்ட துறைகளில் ஆக்கப்பூர்வமாக வளர்ச்சியடைய வேண்டும் என்று இந்த ஆவணம் கூறுகிறது. அன்னிய முதலீடுகளை பயன்படுத்தும் தரத்தை உயர்த்துவதற்கு இந்த ஆவணம் வழிகாட்டியுள்ளது. முன்னேறிய தொழில் நுட்பம், நிர்வாக அனுபவம் மற்றும் திறமைசாலிகளை கொண்டு வந்து, புத்தாக்கத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தப்பட வேணடும் என்று கூறப்பட்டுள்ளது.
|