• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-21 17:23:14    
1221நேயர் நேரம்

cri
வி------நேயர் மன்ரக் கருத்தரங்கை சேந்தமங்கலத்தில் வெற்றிகரமாக நடத்திமுடித்த உங்கள் அனைவருக்கும் வணக்கும். ரா-----வணக்கம் நேயர்களே, கருத்தரங்கு நன்றாக நடந்ததா, இந்தக் கருத்தரங்கில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தை புதிய சிகரத்திற்கு உயர்த்த வேண்டும் என விரும்புகிறோம். சரு, விஜயலட்சுமி, கடிதங்கலைப் பார்க்கலாமா, முதலில், நாகைப்பட்டினம் மாவட்டம் காரியாப்ட்டினம் நேயர் வி ஆர் டிஷ்பராஜன் அழகான தீபாவளிபட்டினம் வாழ்த்தோடு எழுதிய கடிதம் அக்டோபர் 20 அன்று ஒலிபரப்பான உங்கள் குரல், அறிவியல் உலகம் இரு நிகழ்ச்சிகளையும் பாராட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் கருமண்டபம் சக்தி நகர் நேயர் ரா செல்ல முத்து ஜுலை மாத விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி பற்றிக் குறை கூறி எழுதியிருக்கிறார். வி------அப்படியா, என்ன குளை ரா-----ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன் பட்டத்தை சீன வென்றதாக கூறினீரிகள். ஆனால் இந்திய அணி எந்த இடத்தைப் பிடித்தது என்பதைக் கூறவில்லை. விளையாட்டுச் செய்திகளில் இந்தியாவிற்கும் முக்கியத்துவம் 90 வேண்டும் என்கிறார். வி-------நேயர் செல்லமுத்து, உங்களுடைய மனக் குறையை புரிந்து கொண்டோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரா------திருச்சி அண்ணாநகர் விடி ரவிச்சந்திரன் ஆகஸ்ட் 10 நேருக்கு நேர் நிகழ்ச்சி ஏகப்பட்ட புகழ்மாலைப்பகுதியாக மாறி விட்டதே எனறும் அக்டோம்பர் 21 உங்கள் குரல் வழவழா என்றிருந்தது என்று குறிப்பிட்டு விட்டு, மேருந்தில் சுற்றுலா என்ற இன்பப்பயண நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார். பாண்டிச்சேரி பேட்டையன் சத்திரம் நேயர் வி கோவிந்தராஜ் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் உடல் எடையைக் குறைக்கும் உணவு வகைகள் மற்றும் பயிற்சிகள் பற்றிய தகவல் பயனுல்ளது என்கிறார். புதுவை மாநிலம் பெரிய காலாப்பட்டு நேயர் பி சந்திரசேகர் நவம்பர் திங்கள் முதல் வார நிகழ்ச்சிகல் பற்றி கருத்து எழுதியுள்ளார். வி-----நேயர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு நன்றி ரா------ராசிபுரத்தில் இருந்து எஸ் மணிமேகவை மே ஜூன் ஜூலை திங்களில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுல்ளார். கோவை மாவட்டம் தென் பொன்முடி நேயர்கள் மணிகண்டன் நாகமணி இருவரும் செப்டம்பர் திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, துப்பறியும் வாங் என்ற கதையில் சீனப் பெருந்சுவரை தமிழர்கள் சுற்றிப்பார்த்தைக் கேட்டபோது நாங்களே பார்த்தது போல் உணர்ந்தோம் என்கின்றனர். மேலும் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் பொரியாளர்கள் கோபிநாத் முத்துராமன் அளித்த பேட்டியில் சீனர்களின் உழைப்புப்பண்பை அறிய முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆட்குக்கால் சூப் அருந்தும் எங்களுக்கு சீன உணவு அரங்கத்தில் காளான் கோழி இறைச்சி சூப் பற்றிக் கூறியது. அருமையாக இருந்தது என்று கூறிகின்றனர். ஈரோடு மாவட்டம் கோங்கம் பாளையம் கணேசன் நவம்பர் நிகழ்ச்சிகள் பற்றி எழுதியுள்ளர். குறிப்பாக 19-10-05 அன்று நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அரியாக்கசுண்டன்பட்டி இளங்கோவன் கூறிய கருத்துக்கள் எங்களுக்கு ஊக்கமூட்டின என்கிறார். மயிலாடு துரை தலைஞாயிறு நேயர் பரசலூர் பி எஸ் சேகர் செப்டம்பர் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதிய கடிதம் அறிவியல் உலகம் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். வி----நேயர்களின் பாராட்டுக்கு நன்றி.