
இன்றும், தை இன மங்கையரின் உடைகளில், மயில் அலங்கரிக்கப்படுகின்றது. "நீர் தை" இன மங்கையரின் ஆடைகளும் அலங்காரமும் குறிப்பிடத்தக்கவை.
"நீர் தை" இனம், தை இனத்தின் ஒரு பிரிவு. நீர் ஓரத்தில் வாழ்வதால், இவ்வினத்துக்கு "நீர் தை இனம்" என்ற பெயர் வழங்கப்பட்டது. வெறும் காலால் நடக்கும் பழக்கமுடைய இவ்வின மங்கையர், நீளமான பாவாடை அணிகின்றனர். இத்தகைய வண்ண வண்ணப் பாவாடையும் மேல்சட்டையும் அணிந்துள்ளதால், உயரமான, நல்ல உடல் உருவமுடைய இம்மங்கையர், மரங்களிடையே உலா வரும் மயில் போல் காணப்படுவர்.
அழகிய மங்கை, மயில் போன்றவன் என, தை இனத்தவர் கூறுவர். Yu Men என்பவள், மிகவும் அழகான தங்க மயிலாக காட்சியளிக்கின்றார். இப்பாவாடை அணிவதில் கவனம் தேவை என்று அவர் கூறினார்.
"வழக்கமாக, மேலிருந்கு கீழாக அதை அணிய வேண்டும். அவ்வாறே கழற்றவும் வேண்டும். கீழிருந்து மேலாக என்பது, அனுமதிக்கப்படுவதில்லை. தை இன மங்கையர் குறிப்பதற்காக, கரையிலிருந்து மெதுவாக ஆற்றை நோக்கி நடக்கும் போது, இப்பாவாடையை மேலாக சுருக்கிக்கொண்டே நடப்பர்; தம் உடல் முழுமையாக நீரில் மூழ்கிய பின், அதை அகற்றி, தலைப்பாகையாக அணிந்து கொள்வர். குளித்த பின், அதே முறையில் அவர்கள் ஆற்றுங்கரை நோக்கி நடந்தவாறே, பாவாடையை அணிவர்."
|