• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-26 15:43:36    
சோதனையின் முடிவு

cri
ஒரு காட்சியை ஒட்டுமொத்தமாக காண்பதில் உள்ள வேறுபாடுகளை விளக்க ஜப்பானியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் ஒரு சோதனையை வைத்தார் நிஸ்பெட். நீருக்கடியில் உள்ள காட்சியை சித்திரிக்கும் ஒரு படத்தை கொடுத்தார். அமெரிக்கர்களோ, நீருக்கடியில் மிகவும் பிரகாசமான அல்லது வேகமாக நகரும் பொருட்களை-வேகமாக நீந்திய 3 மீன்களைக் காண்பதாகக் கூறினர். அமெரிக்க மாணவர்கள் உடனே பதில் கூறி விட்டனர். ஜப்பானிய மாணவர்களோ, நீரோட்டத்தைப் பார்ப்பதாகவும், தண்ணீர் பச்சையாக உள்ளது என்றும், நீருக்கடியில் பறவைகள் இருப்பதாகவும் கூறிவிட்டு, அப்புறம் மீன்களைக் குறிப்பிட்டனர். ஜப்பானியர்கள் 60 விழுக்காடு அதிகத் தகவல்களைக் கொடுத்தனர். மேலும், படத்தின் பின்னணிக்கும், மேலோட்டமாக தெரியும் பொருட்களுக்கும் இடையில் உள்ள உறவையும் விவரித்தனர். சீன மாணவர்களும், அமெரிக்க மாணவர்களும் ஒரு படத்தைப் பார்த்த போது, அவர்களுடைய கண்விழிகள் நகரும் போக்கை ஆய்வாளர்கள் உற்றுக்கவனித்தனர். அமெரிக்கர்கள் ஒரு காடு பற்றிய படத்தை நேராகப் பார்த்து, புலி இருப்பதாகக் கூறினர். ஆனால் அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். சீனர்களின் விழிகளோ வேகவேகமாக நகர்ந்தன. படத்தின் முன்னணியிலும், பின்னணியிலும் தெரியும் பொருட்களை மாறிமாறிப் பார்த்தனர்.

இவ்வாறு குறைவான அளவுக்குப் புரிந்து கொள்வதற்கு பண்பாட்டு வித்தியாசமே காரணம். ஒரு பொருளை நாம் எப்படிப் பார்க்கிறோம்; உலகை எவ்வாறு ஆராய்கிறோம் என்பது நாம் எப்பகுதியில் தோன்றியவர்கள் என்பதைப் பொறுத்தது என்று மாஸா சூஸட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் கைல் ஆர். கேவ் கூறுகிறார்.

ஆசியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே ஒரு புத்தகத்தை ஊசிக்கும் போது விழிநகர்வதில் வேறுபாடு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு, அந்தந்த மொழிகள் எழுதப்படுவதில் காணும் வேறுபாடே காரணம். ஆசிய நாடுகளின் எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களாக இருப்பதும். ஐரோப்பிய மொழி எழுத்துக்கள் நேர் கோட்டு எழுத்துக்களாக இருப்பதும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் எனலாம்.