• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-26 20:29:14    
ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு 6

cri

அவர்கள் செத்துப் போனவனின் மாமிசத்தைத்தான் தின்பார்கள்! கண்ணில் அசிங்கமான பார்வையுடன் தந்திரமான ஒரு விலங்கு இருக்கிறதாம். ஓநாய் என்பார்களாம். அது செத்துப் போன மாமிசத்தைத்தான் தின்னுமாம். எங்கோ படித்த நினைவு. அது பெரிய பெரிய எலும்புகளைக் கூட கரகரவென்று அரைத்துத் துண்டுகளாக்கி விழுங்கி விடுமாம். அதைப் பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது. ஓநாய்கள் நரிகளுடன் உறவு உள்ளவை. நரிகளோ நாய்க் குடும்பத்தைச் சேர்ந்தவை. அன்றொருநாள் ச்சாவோ வீட்டுநாய் என்னைப் பல முறை முறைத்துப் பார்த்தது. அதுவும் இந்தச் சதியில் சேர்ந்திருக்கிறது. அர்களுக்கு உடந்தையாக ஆகிவிட்டது. முதியவர் என்னை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஆனால் அவருடைய பார்வை என்னை ஏமாற்றி விடுமா?

எல்லாரிலும் கண்டிக்கத்தக்கவன் எனது அண்ணன்தான். அவனும் மனிதன்தானே! பின்னர் ஏன் பயப்படாமல் மற்றவர்களுடன் சேர்ந்து என்னைத் தின்ன சதிசெய்கிறான்? ஒரு செயலைச் செய்து பழகிவிட்டால், அது குற்றமாகத் தோன்றாதோ! அல்லது அவனுடைய மனமும் தவறு என்பதைத் தெரிந்தே செய்யும் அளவுக்குக் கல்லாகிவிட்டதோ!

மனிதனைத் தின்பவர்களைச் சபிக்க வேண்டுமானால் என் அண்ணனில் இருந்துதான் தொடங்க வேண்டும். மனிதனைத் தின்பவர்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டுமானாலும், நான் எனது அண்ணனில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

உண்மையில் இது போன்ற வாதங்களை அவன் நீண்டகாலத்துக்கு முன்பே கேட்டுத் திருந்தியிருக்க வேண்டும் ......

திடீரென யாரோ வந்தார்கள். அவனுக்கு இருபது வயதுதான் இருக்கும். அவனைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. முகம் மலரச் சிரித்தபடியே வந்தான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்த போது அது உண்மையான சிரிப்பாக எனக்குத் தோன்றவில்லை. அவனிடம் கேட்டேன்.

"மனிதர்களைத் தின்பது சரிதானா?" சிரித்தபடியே அவன் சொன்னான்.

"பஞ்சம் இல்லாத போது எப்படி மனிதனை மனிதன் தின்ன முடியும்?"

எனக்குப் புரிந்துவிட்டது. இவனும் அவர்களில் ஒருவன்தான். ஆனாலும் துணிச்சலை எல்லாம் ஒன்று திரட்டி திரும்பவும் கேட்டேன்.

"அது சரிதானா?"

"ஏன் இதைப் பற்றி எல்லாம் கேட்கிறாய்? நீ என்ன... ஜோக் அடிக்கிறாயா? இன்னைக்கி நாள் நல்லா இருக்கு இல்லே."

"நான் நல்லாத்தான் இருக்கு. நிலாவும் பிரகாசமா இருக்கு. ஆனால், எனக்குப் பதில் சொல்லு, அது சரிதானா?"